Entertainment lifestyles News

பல கோடி ரூபாய்க்கு சொந்தக் காரர்.. உலக பணக்காரர்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.. யார் இவர்?

ஒரு சாதாரண மருத்துவராக தன்னுடைய பணியை தொடங்கி தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ குழுமத்தை உருவாக்கி மத்திய அரசின் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வென்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ஒரு மருத்துவர்.




டாக்டர். நரேஷ் ட்ரெஹான் இந்தியாவிலேயே திறமை வாய்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் இவர். தன்னுடைய 77 வயதிலும் தொடர்ந்து மருத்துவ சேவை வழங்கி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம் பிடித்தார். மேடாண்டா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் , நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக இவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது குடும்பமே ஒரு மருத்துவ குடும்பம்.

இவரது தாய் மகப்பேறு மருத்துவர், தந்தை காது மூக்கு தொண்டை நிபுணர். எனவே சிறு வயது முதலே மருத்துவ உலக அனுபவம் கிடைத்துவிட்டது. இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மருத்துவ குழுமத்தை உருவாக்கிட வேண்டும் என சிறு வயதிலேயே நோக்கம் கொண்டிருந்தார். 1963 ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள கி ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இவர் அங்கே படிப்பை முடித்துவிட்டு 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றார்.




அங்கே தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவ மேற்படிப்பை முடித்தார். 1988 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய அவர் முதலில் அப்போலோ மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு ஹரியானாவின் மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான மேடாண்டா தி மெடிசிட்டி என்ற மிகப்பெரிய மருத்துவமனையை நிறுவினார்.போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் 2287வது இடத்தை பிடித்திருக்கிறார் .

இவரது சொத்து மதிப்பு 11,680 கோடி ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட ஐந்து 50 ஆண்டுகளாக இருதய அறுவை சிகிச்சை துறையில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 1991 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2001 ஆம் ஆண்டு பத்மபூஷன் ஆகிய விருதுகளை பெற்றார். இதுவரை வெற்றிகரமாக 48 ஆயிரம் ஓபன் ஹார்ட் சர்ஜரிகளை செய்திருக்கிறார்.

இவரது நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் குளோபல் ஹெல்த் என்ற பெயரில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் சந்தை மூல தனமானது 35,926 கோடி ரூபாய் ஆகும். இதன் ஒரு பங்கு மதிப்பு 1,338 கோடி ரூபாயாக இருக்கிறது வட இந்தியாவில் இவர் ஐந்து மருத்துவமனைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறார். மேடாண்டா மருத்துவ குழுமத்தில் இவருக்கு 33.6 % பங்குகள் உள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!