Samayalarai

நெத்திலி மீன் தொக்கு… இப்படி செஞ்சு பாருங்க.. வேற லெவல் டேஸ்ட்.!

நெத்திலி மீன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நெத்திலி மீனை கொண்டு குழம்பு, வறுத்து மற்றும் எண்ணெய்யில் போட்டு பொரித்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.

ஆனால் நெத்திலி மீனை வைத்து கொட்டியான தொக்கு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? இல்லை என்றால் இந்த ரெசிபி பதிவு உங்களுக்காக தான். இந்த நெத்திலி மீன் தொக்கை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். சுவையான நெத்திலி மீன் தொக்கை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.




தேவையான பொருட்கள் :

  • நெத்திலி மீன் – 1/4 கிலோ

  • சின்ன வெங்காயம் – 10

  • தக்காளி – 4

  • பச்சை மிளகாய் – 4

  • பூண்டு – 4 பல்

  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

  • தேங்காய் பால் – கால் கப்

  • மஞ்சள் தூள் – சிறிதளவு

  • மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

  • கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்

  • கடுகு – 1/4 டீஸ்பூன்

  • சீரகம் – 1/4 டீஸ்பூன்

  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

  • எண்ணெய் – தேவையான அளவு

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • உப்பு – சுவைக்கேற்ப




News18

செய்முறை விளக்கம் :

  • முதலில் நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பின்பு புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

  • அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தலித்துக்கொள்ளவும்.

  • பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.




  • தக்காளி மென்மையாக வதங்கியவுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

  • பின்னர் அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

  • இவை கொதிக்க தொடங்கியதும் அலசி வைத்துள்ள நெத்திலி மீனை போட்டு கலந்து தேங்காய் பால் சேர்த்து சமைக்கவும்.

  • தொக்கு தேவையான அளவு கெட்டியான பதத்திற்கு வந்து எண்ணெய் பிரிந்ததும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைக்கவும்.

  • அவ்வளவுதான் ருசியான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட தயார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!