Cinema Entertainment

கில்லி ரீ-ரிலீஸை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்…அம்மாடியோ முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா

விஜய் நடித்துள்ள கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகை திரிஷா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்துள்ளது. விஜய், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கில்லி என்ற திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தை கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த தரணி திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். ஏ.எம். ரத்னம் தயாரித்த இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.




8  கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கில்லி திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் சரவண வேலு என்ற வேலு கேரக்டரில் விஜய்யும், தனலட்சுமி கேரக்டரில் த்ரிஷாவும் நடித்திருந்தனர். தனலட்சுமியான த்ரிஷாவை ஒன் சைடாக காதலிக்கும் வில்லன் முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் பிரகாஷ்ராஜ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கபடி போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய் கபடி வீரனாக இந்த படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கில்லி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரும் வரவேற்பை பெற்று படத்திற்கு பலம் சேர்த்தது. குறிப்பாக அப்படிப் போடு என்ற பாடல் இந்தி திரையுலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கில்லி படத்தின் சேஸிங், கபடி மற்றும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பின்னர் கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், 2004 இல் கில்லி படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த அனுபவத்தை மீண்டும் இப்போது உணர்கிறேன். என்று கூறியுள்ளார். திரிஷாவின் பதிவு தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதன் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் த்ரிஷாவை வாழ்த்தி பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அப்போது வெளியான இப்படம் 50 கோடி வரை வசூலித்து ஹிட் அடித்தது. அது மட்டுமின்றி திரிஷா விஜய் ஜோடியின் கெமிஸ்ட்ரி அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது.

அப்படிப்பட்ட இப்படம் 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. அதன்படி கில்லியின் முதல் நாள் வசூல் 10 கோடியாக உள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தியேட்டர்களில் ஆடியன்ஸின் வரவு உயர்ந்துள்ளது. மேலும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தற்போது கில்லி சொல்லி அடித்துள்ளது.

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!