Cinema Entertainment

கில்லி ரீ ரிலீசுக்கு அப்புறம் மீட் பண்ணிய விஜய்.. அதன் ரகசியம்?

புதிதாக வெளியாகும் படங்களுக்கு கூட இப்படி வரவேற்பு கிடைக்குமா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு கில்லி படத்தின் ரீ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்திற்கு வசூல் பெரிய அளவில் கிடைத்து வருகிறது.

அதுவும் இந்த படத்தில் விஜய்யின் டயலாக் மற்றும் அப்படி போடு பாடல் போன்ற சிலவற்றை ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க தியேட்டரிலும் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் தரணி சமீபத்தில் விஜய்யை சந்தித்திருந்தார்.

ஆனால் இதற்கு முன்னதாக மூன்று முறை விஜய்யை சந்திக்க முயற்சி செய்திருந்தார். ஆனால் விஜய் சில காரணங்களினால் அதை தவிர்த்து இருக்கிறார். அதாவது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் இறங்க உள்ளார்.




தரணியை சந்திக்க மறுத்த விஜய்

ஆகையால் இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். இது கடைசி படம் என்பதால் விஜய் இந்த படத்திற்காக பல கணக்குப் போட்டு இருக்கிறார்.

அதுவும் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல தான் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரணி தன்னிடம் கால்சூட் கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் விஜய் சந்திக்காமல் இருந்தார்.

ஏனென்றால் தரணி தன்னிடம் கேட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்ற சங்கடத்தில் விஜய் இருந்துள்ளார். ஆனால் இப்போது கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி சக்கை போட்டு போட்டு வரும் நிலையில் இந்தப் படத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் மற்றும் தரணி இருவரும் விஜய்யை பார்க்க சென்றிருந்தனர்.

அப்போது இவர்களுடன் விஜய் மகிழ்ச்சியாக பேசிய நிலையில் தரணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வையும் அணிவித்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!