gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/வீ.களப்பட்டி வேண்டிமுத்துக் கருப்பு

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளதே வீ.களப்பட்டி என்கின்ற சிறிய கிராமம். அங்கு ஒரு பெரிய ஏரியை மக்கள் உருவாக்கி இருந்தனர். அங்கு இருந்த செட்டிநாட்டை சேர்ந்த வேண்டிமுத்து என்பவர் மலையாளக் கருப்பை வணங்கி வந்தார். அவர் மறைந்தப் பின் அவருடைய சந்ததியினர் அவரை ( கருப்பை) கவனிக்கவில்லை என்பதினால் கருப்பு அவர்களுக்கு தொல்லை தரத் துவங்கினார். ஆகவே அவர்கள் ஒரு மலையாள மந்திரவாதியை அழைத்து அவரை கட்டி வைத்தனர். ஆனால் அவர் அதை உடைத்துக் கொண்டு வெளியேறி வீ.களப்பட்டியை அடைந்தார்.

காவல் தெய்வங்கள் | Tiruchendur

வீ.களப்பட்டியில் அந்த நேரத்தில் அந்த ஏரி உடைந்தது. அதை கஷ்டப்பட்டு கிராமத்தினர் சீர்படுத்தினர். ஆனால் அங்கு வந்த கருப்பு அதை மீண்டும் உடைத்து விட்டார். மீண்டும் மீண்டும் உடைப்பை சரி செய்தாலும் அதை அவர் உடைக்கத் துவங்க அது இரண்டு நாட்கள் தொடர்ந்தது. ஆகவே அந்த கிராமத்தினர் என்ன நடக்கின்றது என கண்காணித்தனர். அவர்கள் அதை செய்வது கருப்பரே என்பதைக் கண்டு பிடித்தனர். அவரோ அவர்களிடம் தான் ஒரு கடவுள் எனவும் தனக்கு ஆடுகளை பலி தந்து வழிபட்டால் ஏரியைக் காப்பேன் என்றும் கூற அவர்களும் அவருக்கு ஆலயம் எழுப்பி வணங்கினார். அதன் பின் இன்றுவரை அந்த ஏரி உடையவில்லை. வேண்டிமுத்து கருப்பரை வணங்கி வந்ததினால் அந்த தேவதையை அவர்கள் வேண்டிமுத்துக் கருப்பு என அழைக்கலாயினர். அவர் ஆலயத்தின் பின்னால் பெரிய ஆல மரம் உள்ளது. அந்த ஊரில் உள்ளவர்கள் புதியதாக தாம் எது செய்தாலும் கறுப்பரின் அனுமதி பெற்றே அதை துவக்குவார்கள். பதில் கேட்டு காத்திருப்பவர்கள் பல்லி கத்தினால் அதை அவருடைய சம்மதம் என எடுத்துக் கொள்கின்றனர். மாசி மாதத்தில் மூன்று நாட்கள் காலரி (மைதானம் என்பது பொருள்- சாந்திப்பிரியா) எனும் பெரிய விழா நடைபெறுகின்றது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளதே வீ.களப்பட்டி என்கின்ற சிறிய கிராமம். அங்கு ஒரு பெரிய ஏரியை மக்கள் உருவாக்கி இருந்தனர். அங்கு இருந்த செட்டிநாட்டை சேர்ந்த வேண்டிமுத்து என்பவர் மலையாளக் கருப்பை வணங்கி வந்தார். அவர் மறைந்தப் பின் அவருடைய சந்ததியினர் அவரை ( கருப்பை) கவனிக்கவில்லை என்பதினால் கருப்பு அவர்களுக்கு தொல்லை தரத் துவங்கினார். ஆகவே அவர்கள் ஒரு மலையாள மந்திரவாதியை அழைத்து அவரை கட்டி வைத்தனர். ஆனால் அவர் அதை உடைத்துக் கொண்டு வெளியேறி வீ.களப்பட்டியை அடைந்தார்.

வீ.களப்பட்டியில் அந்த நேரத்தில் அந்த ஏரி உடைந்தது. அதை கஷ்டப்பட்டு கிராமத்தினர் சீர்படுத்தினர். ஆனால் அங்கு வந்த கருப்பு அதை மீண்டும் உடைத்து விட்டார். மீண்டும் மீண்டும் உடைப்பை சரி செய்தாலும் அதை அவர் உடைக்கத் துவங்க அந்த கிராமத்தினர் என்ன நடக்கின்றது என கண்காணித்தனர். அவர்கள் கருப்பை கண்டு பிடித்தனர். அவரோ அவர்களிடம் தான் ஒரு கடவுள் எனவும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபட்டால் ஊரைக் காப்பேன் என்றும் கூற அவர்களும் அவருக்கு ஆலயம் எழுப்பி வணங்கினார். அதன் பின் இன்றுவரை அந்த ஏரி உடையவில்லை.

அவர் ஆலயத்தின் பின்னால் பெரிய ஆல மரம் உள்ளது. அந்த ஊரில் உள்ளவர்கள் புதியதாக தாம் எது செய்தாலும் கறுப்பரின் அனுமதி பெற்றே அதை துவக்குவார்கள். பதில் கேட்டு காத்திருப்பவர்கள் பல்லி கத்தினால் அதை அவருடைய சம்மதம் என எடுத்துக் கொள்கின்றனர். மாசி மாதத்தில் மூன்று நாட்கள் காலரி விழா நடை பெறுகின்றது. 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!