gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள் /ராக்காயி அம்மன்

எம்பெருமான் ஸ்ரீமந்த் நாராயணன் த்ரிவிக்ரமாவதாரம் செய்து சகல உலகங்களையும் அளந்த போது எம்பெருமானின் திருவடி பிரம்ம லோகத்திற்கு செல்ல அப்போது(36 ஆயிரம் வருடங்களாக ) பெருமானின் பாதத்தை கண்டு வணங்கிட வேண்டி தவம் செய்த பிரம்ம தேவனும் தன் அருகில் ஸ்வரணா கலசத்தில் இருந்த கங்கை நீரால் எம்பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தான்.




கதைக்களஞ்சியம்: 2010

அப்போது எம்பெருமானின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பு எனும் நூபுரத்திலும் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூவுலகிற்கு வந்து சேர்த்து அன்று முதல் இன்றும் என்றும் ஸ்ரீமத் நாராயணின் திருவடியில் இருந்து பெருகி வருகிற புண்ணிய நதியாக திகழ்கிறது. பிரம்ம தேவனால் பெருமானின் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கங்கையே எம்பெருமானின் திருவடியில் அணிந்துள்ள நூபுரம் எனும் சிலம்பில் பட்டு இங்கே வற்றாத அருவியாக ஓடிவருவதால் நூபுர கங்கை என்றும் தமிழில் சிலம்பாறு என்றும் பாடல் பெற்று உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் விடச் சிறந்ததாய் விளங்குகிறது. இந்த நூபுர கங்கை புண்ணிய தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி தினத்தன்றுஸ்ரீ சுந்தரராஜ பெருமான் எழுந்தருளி தைலக்காப்பு திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்கு எல்லா மங்களங்களையும் அருளுகிறார்.

தல வரலாறு : சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகையாற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!