gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (20.04.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று முழுவதும் துவாதசி. இன்று மாலை 03.50 வரை பூரம். பின்னர் உத்திரம். பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். வியாபாரம் நீங்கள் நினைத்த மாதிரி நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அனுகூலம் பெற மாட்டீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பணத்தை இழக்காதீர்கள்.இன்று சிவபெருமானை வழிபடலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

நீங்கள் விருப்பப்பட்டு வாங்கிய தோப்பில் பராமரிப்புப் பணியை மேற்கொள்வீர்கள். விவசாய வேலைகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நம்பிக்கையான நபரிடம் பணத்தைக் கொடுத்து வைப்பீர்கள். காதலிக்கு கம்மல் வாங்கி பரிசளிப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலில் வருமானம் பெருகி முன்னேற்றம் காண்பீர்கள்.இன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.




மிதுன ராசி அன்பர்களே!

பெண்ணின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிடுவீர்கள். வீட்டில் பழுதான மின்சார உபகரணங்களை மாற்றுவீர்கள். குடும்பத்துடன் சென்று துணிமணிகள் கட்டில் மெத்தை வாங்குவீர்கள். பொறுமையாகப் பேசி தாய்மாமன் வீட்டில் இருந்த சிக்கலை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். வெளிநாட்டுக்குச் செல்ல விருக்கும் சகோதரருக்கு பண உதவி செய்வீர்கள். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

அரசியல் தலைவர்கள் சிறப்பாக வேலை செய்து மக்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் தங்கள் தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்வீர்கள். தடுமாறி விழுந்த மனைவிக்கு மாவு கட்டு போடுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்க கடையை அலங்கரிப்பீர்கள். கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

தொலைதூரப் பயணங்களில் தொல்லைகளை அனுபவிப்பீர்கள். ஒத்துழைப்பு தர மறுக்கும் ஊழியர்களால் உற்பத்தியில் பின்னடைவை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கருத்தை திணிக்க முயற்சி செய்யாதீர்கள். பிள்ளைகளால் மனக் கலக்கம் அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாவதால் ஏமாற்றம் அடைவீர்கள்.சிவபெருமானை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக பழகினால் இழப்பை சந்திக்க மாட்டீர்கள். கேலி கிண்டல் செய்கிறோம் என்று அவமானப்பட்டு விடாதீர்கள். கூடிப் பேசி உங்களோடு வேலை பார்ப்பவர்கள் உங்களைக் கவிழ்க்க முயற்சி செய்வதை உணர்வீர்கள். எந்தக் காரணம் கொண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதும் குறையும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக்கூடும். கவனம் தேவை.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.




துலா ராசி அன்பர்களே!

உங்கள் தொழிலுக்கு தேடி வந்து ஒரு நபர் உதவி செய்வார். நம்பிக்கையாக முதலீடு செய்து பக்கபலமாக இருப்பார். சிறப்பாக வியாபாரம் செய்து பொறுப்பாக பணம் சேர்ப்பீர்கள். எதிர்காலத்திற்காக திட்டம் போட்டு சேமிக்க நினைப்பீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள்‌. கமிஷன் வியாபாரத்தில் முனைப்பு காட்டுவீர்கள்.
இன்று வருமானம் உயரும் . லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிக ராசி அன்பர்களே!

நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான முன்னேற்றம் காண்பீர்கள். என்றோ வாங்கிப்போட்ட சொத்தின் மூலம் இன்று பெரிய வருமானம் பார்ப்பீர்கள். கடைகளில் செய்த முதலீடுகளால் கணிசமான லாபம் பெறுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியுடன் புதிய கிளைகள் திறப்பீர்கள். அரசு வேலையில் பாராட்டும் சிறப்பும் அடைவீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.




தனுசு ராசி அன்பர்களே!

திருமணப் பேச்சு வார்த்தைகளில் சிக்கல்கள் உண்டாகி சிரமப்படுவீர்கள். காதலியின் கோபத்தை தணிக்க பணிவாக பேசுவீர்கள். அவசரமான வேலையாக இருந்தாலும் நிதானமாகச் செய்வீர்கள். வேலை இடத்தில் எதிர்பாராத சின்ன விபத்து ஒன்றை சந்திப்பீர்கள். தகப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேச்சுவார்த்தை முற்றி மன வேதனை அடைவீர்கள்.விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

அடுத்தவர் பேச்சைக் கேட்டு தொழிலில் அகலக்கால் வைக்காதீர்கள். இரு மடங்கு பணம் தருகிறோம் என்று ஏமாற்றும் நபரிடம் எச்சரிக்கையாக ஒதுங்கி நில்லுங்கள். ஆன்லைன் சூதாட்டம் அடியோடு நாசமாக்கிவிடும். சுரண்டல் லாட்டரியில் மனம் சென்றால் பணம் பறந்து போகும். வியாபாரம் மந்தமாக நடக்கும். செலவுகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.




கும்பராசி அன்பர்களே!

நெருக்கமான நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பீர்கள். மாமனார் மாமியார் வகையில் இருந்து அவசர தேவைக்கு பணம் பெறுவீர்கள். கதை கவிதை கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். நுணுக்கமான வேலைகளை திறமையாகச் செய்வீர்கள். அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப்பாக்கிகளை ஒழுங்காகக் கட்டினால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

தொழிலுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளை தைரியமாக நின்று தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள். தடம் மாறிச் சென்றவர்களை வீடு தேடி வரும்படி செய்வீர்கள். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்‌. குடும்பத்திலிருந்த பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் உரிய அனுகூலம் பெற தவற மாட்டீர்கள்.கடன் பிரச்சனை தீர சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் செய்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!