Cinema Entertainment விமர்சனம்

ஷைத்தான் விமர்சனம்..

இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன், ஜான்கி பொடிவாலா, அங்கத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமான “ஷைத்தான்” இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

1998ம் ஆண்டு டோலி சஜாகே ரக்னா எனும் இந்தி படத்தில் தான் நடிகை ஜோதிகா முதன்முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் வாலி படத்தில் நடித்த ஜோதிகா தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். பல வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது பாலிவுட்டில் நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் இந்த ஷைத்தான் உருவாகி இருக்கிறது.




Shaitan: Ajay Devgn, R Madhavan and Jyotika's supernatural thriller to release on THIS date | Bollywood News - News9live

மாதவனுக்கு ஜோடியாக பிரியமான தோழி, டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜோதிகா இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக முதன்முறை நடித்திருக்கிறார். இதில், மாதவன் தான் வில்லன். சரி, ஷைத்தான் படம் ரசிகர்களை திகிலடையச் செய்ததா? அல்லது கடுப்பேற்றியதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஷைத்தான் கதை: வீக்கெண்டை பண்ணை வீட்டில் குடும்பத்துடன் கொண்டாட கபீர் (அஜய் தேவ்கன்) தனது மனைவி ஜோதி (ஜோதிகா) மற்றும் குழந்தைகள் ஜான்வி (ஜான்கி பொடிவாலா), துருவ் (அங்கத் ராஜ்) உடன் செல்கிறார். போகிற வழியில் வனராஜ் (மாதவன்) என்பவரை சந்திக்கின்றனர். சட்டென குடும்பத்தினருடன் நட்பாக பழக ஆரம்பித்துவிடுகிறார் வனராஜ். அப்போது ஜோதிகாவின் மகளுக்கு லட்டு ஒன்றை கொடுக்கிறார். அந்த பெண்ணும் ஆசையாய் அதை வாங்கி சாப்பிடுகிறார். பின்னர், இவர்கள் பண்ணை வீட்டுக்குச் செல்ல, பின்னாடியே மாதவனும் அங்கே வந்து நடுவீட்டில் நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார்.




அஜய் தேவ்கனுக்கும் அந்த குடும்பத்துக்கும் முதலில் ஒன்றுமே புரியவில்லை. அதன் பின்னர் தான் வசியம் செய்த லட்டு கொடுத்து மகளை வனராஜான மாதவன் ஆட்டிப் படைக்க ஆரம்பித்ததும், இதுவரை நட்பாக பழகியது இதற்குத்தானா என குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். மேலும், மகளை வைத்தே குடும்பத்தில் உள்ளவர்களை கொல்ல உத்தரவிடுவது, டார்ச்சர் செய்வது என அந்த சிறுமியை போட்டு பாடாய் படுத்துகிறார் மாதவன். தனது மகளையும் குடும்பத்தையும் இந்த சாத்தானிடம் இருந்து காப்பாற்ற அஜய் தேவ்கன் என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: நல்லா சத்தமா சிரித்து, சந்தோஷமா ஒரு குடும்பத்தை காட்டினால், அடுத்த சில நிமிடங்களில் அந்த குடும்பம் படாத பாடு படப் போகிறது என்பது எழுதப்படாத விதி. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா குகைக்கு ஆசை ஆசையாக போய் அதகளம் செய்து, அலப்பறை எல்லாம் செய்யும் இளைஞர்கள் நண்பன் குழிக்குள் விழுந்ததும் நிலைமையே மாறிவிடுவது போல முதல் 10 நிமிடம் மட்டுமே இந்த படத்தில் சந்தோஷம் அந்த குடும்பத்தினர் முகத்தில் தெரிகிறது. மாதவன் உள்ளே வந்ததும் ஷைத்தான் சைக்கிளில் வந்தது போல அந்த பண்ணை வீடே ரணகளமாக மாறுகிறது.

பிளஸ்: அஜய் தேவ்கன் “திரிஷ்யம்” படத்தின் ரீமேக்கில் நடித்ததை போலவே இந்த படத்திலும் மகளை காப்பாற்ற துடிக்கும் தந்தையாக அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜோதிகா அம்மாவாக எப்படியாவது தனது மகளை கடவுள் என சொல்லிக் கொண்டு கஷ்டத்தை கொடுக்கும் ஷைத்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என போராடும் காட்சிகளில் அசத்தல். மாதவன் வனராஜனாக தனது நடிப்பில் கொடூரத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார். இந்த ஆண்டின் சிறந்த வில்லன் விருது நிச்சயம் இவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மாதவன் மற்றும் அவர் பிடியில் சிக்கிக் கொண்டு கீ கொடுத்த பொம்மையாக மாறி நிற்கும் அந்த இளம் நடிகை ஜான்கி இருவரும் தான் கடைசி வரை ரசிகர்களை தியேட்டரில் சீட் நுனிக்கே கொண்டு வந்து படம் பார்க்க வைக்கின்றனர்.




மைனஸ்: பேய் படத்துக்கு உண்டான அனைத்து மிரட்டல்களும் இருந்தாலும், படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் மாதவன் அந்த பெண்ணை பாடாய் படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. வழக்கமான பேய் படங்களுக்கு உரித்தான கிளைமேக்ஸாகவே இந்த படமும் முடிகிறது. ஆனால், கடைசி வரை என்கேஜிங்காக கொண்டு சென்றிருப்பதால் ஷைத்தான் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!