தோட்டக் கலை

வீட்டிலேயே பாதாம் செடி வளர்க்கும் முறை..!

இன்று நமது வீட்டிலேயே மிக எளிதாக பாதாம் செடி விதை மூலம் வளர்க்கும் முறையை பற்றி பார்க்கலாம். இதற்கு முன்பு ஏலக்காய் செடி விதை மூலம் வளர்க்கும் முறையை பார்த்தோம். தற்பொழுது பாதாம் விதை மூலம் செடி வளர்க்கும் முறையை பற்றி பார்க்கலாம். பாதாம் செடி வளர்ப்பது ஒன்று பெரிய காரியம் இல்லை, வெளிநாடுகளில் மட்டும் தான் இந்த பாதாம் விளையும் என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கின்றன. நமது வீட்டிலேயும் இதனை மிக எளிதாக வளர்க்க முடியும் அது எப்படி என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

  • ஒரு பத்து பாதாம் பருப்பை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைத்துக்கொள்ளுங்கள். இந்த பாதாம் குறைந்தது 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை ஊற வேண்டும்.

  • 24 மணி நேரம் கழித்து ஊறவைத்த பாதம் பருப்பை எடுத்து ஒரு சுத்தமான நீரில் அலசவும்.

  • ஊறவைத்த பாதாமின் ஓரத்தில் தோலை லேசாக உரித்துக்கொள்ளுங்கள்.




அவ்வாறு உரித்த பாதாமை கற்றாழை ஜெல்லில் உரித்த பகுதியை மட்டும் நனைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஈரப்பதத்துடன் இருக்கும் ஆற்று மண்ணை ஒரு பிளாஸ்டிக் கப்பை எடுத்து அதன் அடிப்பகுதியில் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பாதாமின் தோல் உரித்த பகுதி மண்ணின் உள்பக்கம் இருக்கும்படி ஊனவேண்டும்.  உதாரணத்திற்கு மேல் உள்ள படத்தை பார்க்கவும்.

பிறகு மேல் உள்ள படத்தில் உள்ளது போல் இன்னொரு பிளாஸ்டி கப்பை எடுத்து மூடிக்கொள்ளவும்.

எக்காரணம் கொண்டும் தண்ணீர் தெளிக்க வேண்டாம்.. இந்த பிளாஸ்டிக் கப்பில் குறைந்தது 25 நாட்களில் பாதாம் செடி வளர ஆரம்பித்துவிடும். செடி நன்கு வளர்ந்த பிறகு வேறொரு இடத்தில் செடியை நட்டு வைக்கவும்..




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!