Cinema Entertainment விமர்சனம்

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ விமர்சனம்

பிரபல பாடகரும்இசையமைப்பாளருமான பிரதீப் குமார்பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் தயாரித்துள்ள புதிய திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. 

இந்தப் படத்தில் செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகப்ரீத்தி கரன் கதாநாயகியாக அறிமுகமாகிறார்மேலும் சுரேஷ் மதியழகன்பூர்ணிமா ரவிதமிழ்செல்விஷிவானி கீர்த்திஅபிஷேக் ராஜுமாலிக்நாகராஜ்எஸ்.கே.தாஸ்எம்.அமுதாராணிமினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாத் ராமர் இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.  இசையமைத்துதயாரித்துபாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார்உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

ராதாகிருஷ்ணன் தனபால்(எடிட்டர்)விஜய் ஆதிநாதன்(கலை)அமர்நாத்(டிஐ கலரிஸ்ட்)சதீஷ் சேகர்(டைட்டில் சிஜி), isquare மீடியா (ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன்)யாதவ் ஜேபி(டைட்டில் & போஸ்டர் டிசைன்ஸ்)ஜி.சுரேன்(ஒலிக்கலவைமற்றும் ஜி.சுரேன் & அழகியகூத்தன்(ஒலி வடிவமைப்பு).

பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் ஒரு காமுகனின் வாழ்க்கைக் கதையை நியாயப்படுத்துவது போல எடுக்கப்பட்டிருக்கும் அயோக்கியத்தனமான படம் இது!

மதுரையைச் சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன் கல்லூரியில் பி.காம். படித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் காதல் என்ற பெயரில் இளம் பெண்களுக்கு வலை வீசுகிறார். காதலியாக மாட்டும் பெண்களை தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று தடவுகிறார். சிற்றின்பத்தில் ஈடுபடுகிறார். படுக்கைக்கு அழைத்துச் செல்கிறார். அனுபவிக்கிறார். பின்பு கை கழுவிவிட்டு அடுத்தப் பெண்ணைத் தேடி ஓடுகிறார்.




இப்படி ஒரு பெண்ணிடம் அனுபவித்துவிட்டு அடுத்தப் பெண்ணை முகநூலில் தேடுகிறார். மாயவரத்தை சேர்ந்த ப்ரீத்தி கரண் சிக்குகிறார். “நாளை எனக்குப் பிறந்த நாள்” என்கிறார் ப்ரீத்தி. இதனால் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து மடக்க நினைக்கும் ஹீரோ, விடியற்காலையில் தனது மதுரைக்கார நண்பனுடன் பைக்கிலேயே மாயவரம் செல்கிறார்.

வழியில் காண்டம் பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டு ப்ரீத்தியை படுக்கைவரைக்கும் தள்ளிக் கொண்டு போக பிளானுடன் செல்கிறார். ப்ரீத்தியோ வரவிருக்கும் ஆபத்தை உணராமல், தனது முகநூல் நண்பன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான். அவனுடன் பூம்புகார்வரைக்கும் ஒரு லாங் டிரைவ் போகலாம் என்று நினைத்து செல்கிறாள்.

பூம்புகாரில் காமுகன் செந்தூர் பாண்டியனின் எண்ணம் நிறைவேறியதா..? அப்பாவி ப்ரீத்தி கரண் தப்பித்தாரா.. என்பதுதான் இந்தப் இரண்டாம் நிலை பிட்டு படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

படம் என்னவோ விடலைப் பசங்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டுவிடும் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், இயக்குதலில் குறையில்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர்.

நாயகன் செந்தூர் பாண்டியனு இது முதல் படம் என்றாலும் அது தெரியாதவண்ணம் இயல்பாக நடித்திருக்கிறார். வீட்டுக்கு அடங்காத பிள்ளை.. யாருக்கும் அடங்காத குணம். எல்லோரும் என் பேச்சைத்தான் கேட்கணும் என்ற நினைப்பு. பெண்கள் நம் இச்சைக்கு அடங்குவதற்குத்தான் இருக்கிறார்கள். அனுபவிச்சிட்டு கழட்டி விட்ரணும். வேலை முடிஞ்சா போயிட்டே இருக்கணும் என்ற ஒரு பக்கா கிரிமினலுக்கான குணாதிசயத்தை படம் முழுக்கக் காட்டியிருக்கிறார் செந்தூர் பாண்டியன்.

தற்போதைய பெரும்பாலான இளைஞர்களின் மனநிலையையும், வக்கிரமான அவர்களது எண்ணவோட்டத்தையும் தனது ஒவ்வொரு நடிப்பிலும் காண்பித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி கரணை சத்தியமாக யாரும் ஹீரோயின் என்றே சொல்ல மாட்டார்கள். துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர்.. இந்தப் படத்தின் தன்மை கருதி நாயகியாக நடித்திருக்கிறார்.

இளம் பெண்கள் வெளியிடங்களில் எப்படி தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவொன்றுதான் இந்தப் படத்தில் இருக்கும் ஒரேயொரு நல்ல விஷயம்.




ப்ரீத்தி கரண், நம்முடைய பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக காட்சியளிக்கிறார். செந்தூர் பாண்டியனுக்கு அந்த’ இடத்திலேயே உதைவிடும்போது அவரை நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.

“காதல் என்ற பெயரில் கூட்டிட்டு வந்து நீங்க தடவுவீங்க.. அப்போ பொண்ணுகளை என்னடா நினைச்சீங்க..” என்று ப்ரீத்தி கரண் கேட்கும் கேள்வி, சராசரியான பெண் குலத்தவரின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து வீடு திரும்பும்வரையிலும் இருவரும் ‘ஆணாதிக்கம்’, ‘பெண்ணியம்’ என்ற வகையில் பேசிக் கொண்டே வருவதுதான், இப்போதைய தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் யதார்த்த நிலைமையும்கூட..!

செந்தூர் பாண்டியனுக்கு நண்பனாக நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன், அந்த வயதுக்கு ஏற்ற குணாதிசயத்தோடு படம் நெடுகிலும் நாயகனுக்கு ஈடு கொடுத்திருக்கிறார். ஹீரோவுக்காக காண்டம் பாக்கெட் வாங்கும் காட்சியில் மட்டுமே சிரிக்க வைத்திருக்கிறார். 

நாயகியின் தோழியாக பூர்ணிமா ரவி, அவரது தங்கையாக தமிழ்செல்வி இருவரும் ஹோட்டல் காட்சியில் காட்சியை பரபரப்பாக்க பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட் படத்திற்கேற்றாற்போல் மிக எளிமையாக கண்களை உறுத்தாமல் இருக்கிறது.

பிரதீப் குமாரின் இசையில் பாடல்களின் மாண்டேஜ் ஷாட்ஸ்கள் மூலமாக படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். பின்னணி இசை என்ற ஒன்று படத்தில் இருந்ததா என்று இப்போது யோசிக்க வைக்கிறது.

படத்தின் துவக்கக் காட்சியில் சினிமா தியேட்டரில் நாயகன், ஒரு பெண்ணைத் தள்ளிட்டு வந்து அழுத்தமாக பிரெஞ்ச் கிஸ் கொடுக்கும் காட்சியை 2 நிமிடங்களுக்கு லென்த்தாக வைத்திருப்பதிலேயே இந்தப் படம் எப்படிப்பட்டது என்பது புரிந்துவிட்டது.

அடுத்து சுரேஷ் மதியழகன் இரவு நேரத்தில் செல்போனில் பிட்டு படம் பார்த்தபடியே சுய இன்பம் அனுபவிப்பதையும் 2 நிமிடங்களுக்குக் காண்பித்து படத்தின் ஒட்டு மொத்தத் தன்மையையும் வெளிக்காட்டிவிட்டார் இயக்குநர்.




பத்தாததுக்கு படம் நெடுகிலும் “எப்படியாச்சும் செக்ஸ் வைச்சுக்கணும்” என்ற நோக்கிலேயே காட்சிகளாலும், வசனத்தாலும் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இந்த லட்சணத்தில் “இந்தப் படத்துக்குப் போய் எதுக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தாங்கன்னு தெரியலை..?” என்று இயக்குநர் அப்பாவியாய் சொன்னார் பாருங்க.. இதுதான் மிகப் பெரிய கொடுமை..!

இப்போதைய இளைஞர்கள், இளைஞிகளின் வாழ்க்கை தரங்கெட்டுப் போய்க் கொண்டிருப்பது உலகறிந்த விஷயம். இந்த இக்கட்டான, கொடுமையான காலக்கட்டத்தில் அவர்களின் சிற்றின்ப ஈடுபாடு அவர்களது எதிர்கால வாழ்க்கையை அழிக்கும். சமூகத்தைக் கெடுக்கும் என்பதைச் சொல்லாமல் இப்போதைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை மட்டும் காண்பிப்பதால் என்ன புண்ணியம்..? நாம் செய்வது தப்பில்லை என்று படம் பார்க்கும் இளைய சமூகத்தினர் நினைத்துவிட மாட்டார்களா..?

எது சரி..? எது தப்பு..? இதைச் செய்யலாம்..! இதைச் செய்யாதீர்கள்..!  என்று அறிவுரை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் மக்களுக்கு நெருக்கமான மீடியமான திரைத்துறை, அவர்களது வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டுமே ஒழிய.. இந்தப் படம் போல இருப்பதைக் காட்சிப்படுத்துகிறேன் என்ற போர்வையில் போதை வஸ்துக்களை நியாயப்படுத்துவிடக் கூடாது.. இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் தனது சுய லாபத்துக்காக.. பணத்துக்காக.. சமூகத்தைக் கெடுக்கும் வகையில் இந்தப் படத்தை ரெண்டுங்கெட்டானாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

பட்டால்தான் திருந்த முடியும் என்று நினைத்து பாவங்களை செய்வதைவிடவும், பாவத்தின் விளைவுகளை முன்கூட்டியே நாம் அவர்களுக்குச் சொல்வதும், செய்வதும்தான் சிறந்த மனிதப் பண்பு..! இதை இயக்குநர்கள் புரிந்து கொண்டு திரைப்படங்களை உருவாக்க வேண்டும்..!

கெட்ட பேரை வாங்குவது எப்படி என்பதற்கு இந்தப் படமும், படத்தின் இயக்குநரும் மிகச் சிறந்த உதாரணங்கள்..!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!