Cinema Entertainment

நடிகை பத்மினி-6

தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர் நடிகை பத்மினி. 1947-ம் ஆண்டு வெளியான கன்னிகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பத்மினி, தொடர்ந்து முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.




Cinemaazi

குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து சுமார் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதன் காரணமாக க்ளாசிக் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு ராசியாக ஜோடியாக சிவாஜி பத்மினி இருவரும் வலம் வந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி, மலையாளம், சிங்களம், ப்ரஞ்ச், உள்ளிட்ட மொழிப்படங்கில் நடித்துள்ள பத்மினி ரஷ்யமொழி படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நாட்டியத்திலும் தனக்கென தனி அடையாளத்துடன் திகழ்ந்த பத்மினி படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் அவருக்கு இயக்குனர் ஸ்ரீதர் சரியாக பாடம் புகட்ட விளையாட்டுத்தனமாக ஒரு வேலையை செய்துள்ளார். க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் ஸ்ரீதர். பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஸ்ரீதர் பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வகையில் ஸ்ரீதர் எழுத்தில் நாராயண மூர்த்தி என்பவர் இயக்கிய எதிர்பாராதது என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சிவாஜி நாயகனாக நடித்த இந்த படத்தில் பத்மினி நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி சிவாஜி ஸ்ரீதர் பத்மினி இடையே நெருக்கமான நட்பை வளர்த்துள்ளது. இதன் காரணமாக அடுத்து ஸ்ரீதர் தயாரித்த அமர தீபம் என்ற படத்தில் அட்வான்ஸ் கூட வாங்கமால் சிவாஜி பத்மினி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.




தனிப்பட்ட முறையில் எவ்வளவுதான் ஆழமான நட்பு இருந்தாலும், தொழில் என்று வரும்போது ஸ்ரீதர் அதற்குத்தான் முக்கியத்தவம் கொடுப்பாராம். அந்த வகையில் 1960-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் மீண்ட சொர்க்கம். ஜெமினி கணேசன், பத்மினி இணைந்து நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பத்மினி தினந்தோறும் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

இதை கவனத்த இயக்குனர் ஸ்ரீதர் தனது உதவியாளரிடம் சொல்லி பத்மினியிடம் சொல்ல சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஸ்ரீதரின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பத்மினி தொடர்ந்து தாமதமாக வந்துள்ளார். அப்படி ஒருநாள் மேக்கப் அறையில் இருந்து பத்மினி வருவதற்கு வழக்கம்போது தாமதமாகியுள்ளது. இதை பார்த்த இயக்குனர் ஸ்ரீதர் தனது உதவியாளரை அழைத்து கோலி வாங்கி வர சொல்லியுள்ளார்.

தொடர்ந்து பத்மினி மேக்கப் அறையில் இருந்து வெளியே வரும்போது ஸ்ரீதர் தனது உதவியாளர்களுடன் கோலி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதை கவனித்த பத்மினி என்ன படப்பிடிப்பு இல்லாமல் கோலி விளையாடிட்டு இருக்கிறீங்க என்று கோபமாக கேட்டபோது, ஸ்ரீதர் நீங்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டது. உங்களுக்காக காத்திருந்து போர் அடித்துவிட்டது. அதனால் தான் இப்படி விளையாடிக்கிட்டிருக்கோம் என்று கூலாக பதில் கூறியுள்ளார்.

இதை கேட்ட பத்மினி தனது தவறை உணர்ந்து அடுத்த நாளில் இருந்து நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்துள்ளார். ஒருவர் செய்யும் தவறை அவரது முகத்திற்கு நேராக சுட்டிக்காட்டாமல் குறிப்பால் உணர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!