Samayalarai

சிக்கனை வெச்சு சிக்கன் கோன் இப்படி ஒரு டைம் செஞ்சு சாப்பிடுங்க..

எளிதில் செய்யக்கூடியவாறான ரெசிபி ஒன்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம். சிக்கன் கோனை ட்ரை கேள்விப்பட்டிருக்கீங்களா?. இந்த சிக்கன் கோன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அவ்ளோ ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கோன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கோன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.




CHICKEN CONES SAMOSA – Ainy Cooks

தேவையான பொருட்கள்:

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1 சிட்டிகை

* தண்ணீர் – தேவையான அளவு

* சேமியா – சிறிது

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* தந்தூரி மசாலா – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்

* சிக்கன் 65 மசாலா – 1/4 டீஸ்பூன்

* மல்லித்தூள் – 1/4 டீஸ்பூன்

* சோம்பு தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மொசரெல்லா சீஸ் – 1/2 கப்

* மயோனைஸ் – 2 டீஸ்பூன்

ஷீட் செய்வதற்கு…

* மைதா – 1 கப்

* உப்பு – தேவையான அளவு

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு




Chicken Bread Cone Recipe | Tandoori Bread Cone Samosa | Ramadan Special Recipe - YouTube

செய்முறை விளக்கம்:

* முதலில் ஒரு பௌலில் மைதாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கையால் நன்கு கிளறி விட வேண்டும். பின் தேவையான அளவு நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், தந்தூரி மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள், சாட் மசாலா, சிக்கன் 65 மசாலா, மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவிவிட்டு, அதை வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நீர் எதுவும் சேர்க்காதீர்கள்.

* குறைவான தீயில் வைத்து சிக்கனை ஒரு 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது கிளறி விட வேண்டும். * பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து மொசரெல்லா சீஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உள்ளே வைக்கும் ஸ்டப் தயார்.

* அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு உருண்டையை எடுத்து மைதா மாவில் பிரட்டி, வட்டமாக நன்கு மெல்லிசாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

 




* பின்பு தேய்த்த ஒரு மாவை எடுத்து, அதை அரை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நீரை ஊற்றி, மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இல்லாத மைதா பேஸ்ட்டை தயார் செய்து கொள்ள வேண்டும். அதேப் போல் ஒரு தட்டில் சேமியாவை எடுத்து அரை நொறுக்கிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து வெட்டிய ஒரு அரை வட்டத் துண்டை எடுத்து, அதன் நடுவே லேசாக மைதா பேஸ்ட்டை தடவி, கோன் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். விரிசல் உள்ள இடத்தில் மைதா பேஸ்ட்டை தடவி இடைவெளி இல்லாதவாறு ஒட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனுள் சிக்கன் கலவையை வைத்து நிரப்பி, முதலில் மைதா பேஸ்ட்டில் நனைத்து எடுத்து, பின் சேமியாவில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, செய்து வைத்துள்ள கோனில் 2 துண்டுகளை போட்டு, உடனே கரண்டியால் திருப்பிப் போடாமல், ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு, அனைத்து பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து கோனையும் பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் கோன் தயார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!