gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ஏழு தெய்வக் கன்னிகள்

ஏழு தெய்வக் கன்னிகளின் பெயர்கள் –

கன்னிமார்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவர்களிடம் சிவன் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.




ஏழு கன்னிமார் • ShareChat Photos and Videos

  1. பார்வதி அம்மன்

  2. பட்டத்தாள்

  3. அருந்தவம்

  4. பூவாள்

  5. பச்சையம்மன்

  6. மறலியம்மன் என்னும் காத்தாயி

  7. பூங்காவனம்.

கன்னிமார்களின் கதை –

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்கள்.




சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளையாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, “”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, “”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.

“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.




அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், “”இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். மக்களும் உங்களையே முதன்மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக- காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.

குடி கொண்டிருக்கும் இடங்கள் –

பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.
பட்டத்தாள் – புலியூர்.
அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.
பூவாள் – வ. சித்தூர்.
பச்சையம்மன் – குமாரை.
காத்தாயி – வெங்கனூர்.
பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!