Cinema Entertainment விமர்சனம்

இருவரின் கனவு ‘முகவரி’ சேர்ந்ததா?ஒரு பார்வை

ஏய் கீச்சு கிளியே.. ஆண்டே நூற்றாண்டே..ஓ நெஞ்சே நெஞ்சே வா, ஏ நிலவே.. ஏ நிலவே என பாடல்கள் அனைத்தும் பெரு வெற்றி பெற்றது. வைரமுத்து தன் வரிகளால் அபாரம் செய்திருந்தார். இப்படி படத்தில் ஒவ்வொரு அம்சமும் அஜித்தின் வெற்றிக்கு முகவரி எழுதியது என்றே சொல்ல வேண்டும்.

Mugavari Ad Free Movie Sunday... - Tamil Tv Channel Express | Facebook

நடிகர் அஜித் குமாரின் திரை பயணத்தில் முகவரி படத்திற்கு இப்போதும் ஒரு தனி இடம் உள்ளது. ஒரு மாஸ் ஹீரோ திரையில் தோல்வியை எதிர்கொள்வதை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற கேள்விக்கு முற்று புள்ளி வைத்த படம். அந்த எதார்த்தத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். கடந்த 2000 ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் முகவரி. படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.




இந்த படத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கினார். படத்தில் நடிகர் அஜித் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருந்தார். ஜோதிகா நாயகியாக நடித்திருந்தார். எஸ்.எஸ் சக்கரவர்த்தி தயாரித்த இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார்.

நடிகர்கள்

படத்தில் நடிகர் அஜித், ஜோதிகா ஜோடியாக நடித்த நிலையில் ரகுவரன் சிவா கதாபாத்திரத்தில் நாயகனுக்கு அண்ணனாக கச்சிதமாக நடித்திருந்தார். அண்ணியாக சாந்தா கதாபாத்திரத்தில் சித்தாரா நடித்திருந்தார். மேலும் கே. விஸ்வநாத், மணிவண்ணன், விவேக், பாத்திமாபாபு, ஜெய்கணேஷ், பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கதை

ஒரு அன்பான குடும்பம்.. அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தைகள், தங்கை என வாழும் குடும்பத்தின் கனவாகவே நாயகன் ஸ்ரீதரின் கனவு பார்க்கப்படுகிறது. அண்ணன் இயல்பாக வேலை வேலைக்கு செல்ல அண்ணி குடும்பத்தை கவனிக்கிறாள். சிறு வயதில் இருந்தே ஸ்ரீதருக்கு இருக்கும் இசை ஆர்வத்தை குடும்பம் ஆதரிக்கிறது. சினிமாவில் இசை அமைப்பாளராக வேண்டும் என்பது அவனின் வாழ்க்கை லட்சியம்.

அதற்காக ஸ்ரீதர் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறான். ஆனால் ஏதோ ஒரு வகையில் அதற்கு தடங்கல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தோல்வி ஏற்படும் போது எல்லாம் மனமுடைந்து போகும் ஸ்ரீதரை மணிவண்ணனும் விவேக்கும் தேற்றுகின்றனர்.




ஒரு கட்டத்தில் அண்ணனான ரகுவரன் ஸ்ரீதரை தேற்றுவார்.

mugavari.jpg

ஆனாலும் தொடர்ந்து முயலும் ஸ்ரீதருக்கு சினிமா வாய்ப்பு மட்டும் கிடைத்த பாடில்லை. இதற்கிடையில் ஜோதிகா அறிமுகமாகிறார். இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஜோதிகாவின் தங்கைக்கு திருமண வரண் வரும் மூத்தவள் இருக்க இளையவளுக்கு எப்படி மணம் முடிப்பது என ஜோதிகாவின் குடும்பம் யோசிக்கிறது. அந்த சூழலில் ஜோதிகா தன் காதலை குடும்பத்திடம் கூறுகிறார்.

இதையடுதது ஸ்ரீதரும் ஜோதிகாவின் தந்தையை பார்க்க செல்லுகிறார். அங்கு வேலை குறித்த கேள்வி வந்த போது தன் மியூஸிக் டைரக்டர் கனவு பற்றி சொல்கிறான் ஸ்ரீதர். அப்போது ஜோதிகா வீட்டில் கொஞ்சம் பணம் தருகிறோம். அதை வைத்து ஏதாவது தொழில் செய்து கொள் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் தன் காதலைவிட மியூஸிக் டைரக்டர் கனவே முக்கியம் என்று முடிவெடுத்து காதலை துறக்கிறான் ஸ்ரீதர்.

இதற்கிடையில் அண்ணன் ரகுவரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை நடைபெற குடும்பமே ஆட்டம் காண்கிறது. அப்போதும் கூட குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு வேலைக்கு போகிறேன் என்பார்களே தவிர்த்து ஸ்ரீதரை வேலைக்கு செல்ல வற்புறுத்த மாட்டார்கள். ஆனால் இதை எல்லாம் பார்த்த ஸ்ரீதர் தனது கனவுக்காக காதலை துறந்தவன் தன் குடும்பத்திற்காக கனவை ஒதுக்கி வைக்க தயாராகுவான். இந்த எதார்த்தம் தான் படத்தை பெரும் வெற்றி பெற வைத்தது. படம் முழுவதும் வசனங்களால் தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருந்தார் எழுத்தாளர் பாலகுமாரன்.




ஏய் கீச்சு கிளியே.. ஆண்டே நூற்றாண்டே..ஓ நெஞ்சே நெஞ்சே வா, ஏ நிலவே.. ஏ நிலவே என பாடல்கள் அனைத்தும் பெரு வெற்றி பெற்றது. வைரமுத்து தன் வரிகளால் அபாரம் செய்திருந்தார். இப்படி படத்தில் ஒவ்வொரு அம்சமும் அஜித்தின் வெற்றிக்கு முகவரி எழுதியது என்றே சொல்ல வேண்டும்.

அஜித் கேரியரில் முகவரிக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்பதே உண்மை. படம் முழுவதும் ஒரு மனிதனின் கனவை அந்த குடும்பமே தாங்குவது பற்றியது என்றாலும் படத்தில் ரகுவரன் நாயகனுக்கு சொல்லும் கதைதான் படத்தின் ஹைலைட். தங்கையின் கிண்டலால் உடைந்த ஸ்ரீதரிடம் இங்க ஜெயிக்கலனா மக்குனு சொல்லுவாங்க. ஜெயிச்சுட்டா லக்குனு சொல்லுவாங்க.

ஒரு கதை இருக்கு கோல்டு அட் 10 பீட்.. பூமில 10 அடி தோண்டுனா தங்கம் கிடைக்குனு எவனோ ஒருத்தன் சொல்லிட்டான். இவனும் தோண்ட ஆரம்பிச்சான் கல்லு பாறை எல்லாம் தோண்டி கையெல்லாம் கொப்புளிச்சு போச்சு ஊர்ல எல்லாரும் கேட்டாங்க என்னடா பண்றனு அவன் சொன்த கேட்டு ஓஓஓ..ன்னு சிரிச்சாங்க. கேலி பண்ணாங்க. ஆனா இவன் நம்பிக்கையா தோண்டுனா..

போராடி 8 அடி தோண்டிட்டான்.. வெறும் மண்ணுதா வந்துச்சு தங்கம் எதுவும் வரல. வெறுப்புல போயிட்டான். ரெம்ப நாள் கழிச்சு அந்த பக்கமா வந்தவன் என்னடா இது இவ்வளவு பெரிய குழி இருக்குனு கேட்டான். எல்லாரும் சொன்னதும் தோண்ட ஆரம்பிச்சான். தங்கப்பாறைல கடப்பாரை இடிச்சது 8 அடி தோண்டுனவனுக்கு இன்னும் 2 அடி தோண்டனும்னு தோணலபத்தியா? ஸ்ரீதர் தங்கம் கிடைக்குற வரை தோண்டனும். வெற்றி கிடைக்குற வரைக்கும் போராடனும் என்பார். இந்த கதைதான் படத்தின் ஹைலைட்டாக இருந்தது. வெற்றிக்காக போராடியவர்களுக்கு அந்த கதையே முகவரியாக இன்னும் உள்ளது என்றால் மிகையல்ல




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!