gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (19.3.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.33 வரை நவமி. பின்னர் தசமி. இன்று இரவு 11.55 வரை புனர்பூசம். பிறகு பூசம். விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீர்கள் . அலட்சியமாக இருந்தால் கை காசை இழப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். பணவரவில் சுணக்க நிலையை காண்பீர்கள்.
விநாயகரை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி  உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் உச்சம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். மங்கல நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் செல்வாக்குப் பெறுவீர்கள். கழுத்து வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். பந்தய வியாபாரங்களில் ஈடுபடாதீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் விபத்தில் சிக்குவீர்கள். பணத்தை கொடுத்து பகைக்கு ஆளாவீர்கள். வீட்டை நன்றாக பூட்டி விட்டு செல்ல மறைக்காதீர்கள். நகை பணத்தை வீட்டில் வைக்காதீர்கள்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத்  தகர்த்துவிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.

கடக ராசி அன்பர்களே!

பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்தவில்லை எனில் பண இழப்பை எதிர்நோக்குவீர்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலியால் சிறு பிரச்சனையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்து அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். இனிமையாக பேசி மனைவியின் மனக்குறையை போக்குவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தின் மூலமாக பண வரவை அதிகரிக்க பாடுபடுவீர்கள்.
விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நிலையான வருமானம் அடைவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின்  உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

எதிர்பாராத தடைகளை நீக்கி புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். வரவு செலவுகளை சொல்லி மனைவியின் மனக்குழப்பத்தை போக்குவீர்கள். மற்றவர்களுக்காக வாதாடாதீர்கள். வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். அன்புக்குரியவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் ஆதாயம்  உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். கடன் வாங்கும் விஷயங்களைத் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் மந்த நிலையை காண்பீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

எதையும் செய்து முடிக்கும் துணிச்சலை பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். தனியார் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மரியாதையை உயர்த்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி பெறுவீர்கள்.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய  முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே!

ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் சோர்வடைந்து அவதிப்படுவீர்கள். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் இட மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வீர்கள். உறவினர்களிடம் பணம் கேட்டு ஏமாந்து போவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் பிரகாசிப்பீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மீனராசி அன்பர்களே!

வீட்டில் வெடித்த பிரச்சனையால் நிலைகுலைந்து போவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். அலுவலக வேலை காரணமான அலைச்சலால் தூக்கம் இழப்பீர்கள். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!