gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (18.03.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.17 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று இரவு 10.38 வரை திருவாதிரை. பிறகு புனர்பூசம். சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள். சிக்கலான வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வேகமும் விவேகமும் கலந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். மனை இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள்.
இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொழிலை விரிவுபடுத்த வங்கி லோன் பெறுவீர்கள். உறவினர்களின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை பக்குவமாக சமாளிப்பீர்கள். சவாலான காரியங்களில் விரைந்து வெற்றி அடைவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய முக்கிய தகவல்கள் தாமதமாவதால் டென்ஷனாவீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் அலட்சியமாக நடந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள். சக ஊழியர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள். அதிகமான உழைப்பால் விருத்தி காண்பீர்கள். வெளியூர் பயணத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.
துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கடக ராசி அன்பர்களே!

வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தைப் பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் தடுமாறுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி காதலியின் கரம் பற்றுவீர்கள். தாயாரின் சுவாசப் பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட தடை கள் விலகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரவகையில் ஆதாயம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் முன்னேற்ற அடைவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

தனியார் துறையில் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பீர்கள். ஒர்க் ஷாப் நடத்துபவர், டீக்கடை, பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவீர்கள். ஏற்கனவே கொடுத்த பழைய பாக்கிகள் வசூலாகி மனத் திருப்தி அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை பார்த்து தவணை கடனை கட்டுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை அடைந்து மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள். கிடைக்குமா என்று நினைத்த பணம் எதிர்பாராமல் கைக்கு வந்து கடன்களை அடைப்பீர்கள். பம்பரமாகச் சுழன்று புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தை நடத்துவீர்கள்.இன்று மகாலட்சுமியை வழிபட பல வகைகளிலும் அனு கூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புத்திசாலித்தனமாக தொழிலை நடத்த முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வரும் வில்லங்கங்களை அறிவுக் கூர்மையால் தீர்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் தடை ஏற்பட்டு தடுமாற்றம் அடைவீர்கள். காதலியிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். டீக்கடையில் அமர்ந்து விவாதம் செய்யாதீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை  தேவை.முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். அதற்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் பார்க்க பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தேவையான நிதி உதவி பெறுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட புதிய முயற்சிகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

விளையாட்டுக்குப் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். மனைவியோடு மல்லுக் கட்டாதீர்கள். தொழிலை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். சிறிய கம்பெனிகள், இரும்பு நிறுவன முதலாளிகள் முன்னேற்றம் காண்பீர்கள். தள்ளுவண்டி வியாபாரிகள் தன்னிறைவு பெறுவீர்கள். நடைபாதை கடைக்காரர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

கடன் வாங்கி குடும்பத் தேவையை நிறைவு செய்வீர்கள்‌. பணியாளர்கள் சம்பளப் பற்றாக்குறையால் சங்கடப் படுவீர்கள். எதிர்பார்த்து கிடைக்காத பணம் சிலருக்கு எதிர்பாராமல் வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பச் செலவு அதிகரிப்பால் திணறுவீர்கள். கடன் கொடுத்து தேவையில்லாத பகையை சம்பாதிப்பீர்கள். அஜீரணக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் லாபத்தை பெருக்குவீர்கள். எலக்ட்ரீசியன், கொத்தனார் போன்ற வேலை பார்ப்பவர்கள் சாப்பிட கூட நேரம் இல்லாமல் பணி செய்வீர்கள். பழைய சாமான்கள் வாங்கி விற்பவர்களும் நல்ல பலனைப் பெறுவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!