gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (12.03.24)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 11.01 வரை துவிதியை. பின்னர் திருதியை.இன்று அதிகாலை 02.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

நண்பர்கள் உங்கள் மனதில் தேவையற்ற ஆசைகளை உருவாக்க முயன்றால் அதற்கு மயங்கி விடாதீர்கள். தொழிலை நடத்த கடினமாக உழைப்பீர்கள் . அரசு வேலையில் லஞ்சம் வாங்காதீர்கள். நேர்மையான வழியில் சென்றால் பிரச்சனையில் சிக்க மாட்டீர்கள். கொடுத்த கடனை வாங்க சிரமப்படுவீர்கள். யோசிக்காமல் புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள்.
இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

முடங்கிக் கிடந்த தொழிலுக்கு முழு முயற்சியில் உயிர் கொடுப்பீர்கள். தொழிலில் லாபத்தை அதிகரிப்பீர்கள். காதலியின் கோபத்தால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் வரும் பணத்தை சேமிப்பாக மாற்றுவீர்கள். கோபமாக பேசி மரியாதையை கெடுத்துக் கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் புதிய ஆர்டர்கள் பெறுவீர்கள்.முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.




மிதுன ராசி அன்பர்களே!

பழைய கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அணுக்கமான நண்பரின் ஆலோசனையால் ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவரின் வியாபாரத்திற்கு உதவி செய்வீர்கள். அரசு காண்ட்ராக்ட் டுகளில் அமோக லாபம் பெறுவீர்கள். கணினித்துறை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். அசையாச் சொத்து வாங்குவீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடக ராசி அன்பர்களே!

அதிக சிரத்தையுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளால் அல்லல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு ஆனந்தம் அடைவீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இஞ்சினியர்கள் தொழிலில் அதிக வருமானமும் உயர்ந்த மரியாதையையும் பெறுவீர்கள்.
தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.




சிம்ம ராசி அன்பர்களே!

வாழ்க்கைக்கு வருமானம் தேவைதான். அதற்காக தவறான வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். வியாபாரம் சுமாராக நடப்பதால் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் வெடிக்கும் பிரச்சனையால் குழப்பம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

போட்ட முதலீடுகளில் இருந்து திருப்திகரமான லாபம் அடைவீர்கள். பொன் நகைகள் வாங்கி வீட்டுப் பெண்களின் புன்னகைகளைப் பரிசாகப் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு கல்யாண நடத்தி வைப்பீர்கள். பிள்ளைகள்தான் சற்று பிரச்சனையைக் கொடுப்பார்கள். கணவனை இழந்த பெண்மணிக்கு வேலை வாங்கி கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.
வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.




துலா ராசி அன்பர்களே!

கடினமான உழைப்பால் நீங்கள் மனச்சோர்வு அடைவீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என சிலர் கூறும் ஆசைவார்த்தைக்கு இடம் கொடுக்காதீர்கள். ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். தொழில் வெற்றியால் சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்து சந்தோசம் அடைவீர்கள். ரத்த அழுத்த நோயால் மருத்துவச் செலவு செய்வீர்கள்.விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

குடும்பத்தில் இருந்த சங்கடங்களை சாதுரியமாக விலக்குவீர்கள். என்றோ வாங்கிப்போட்ட வீட்டுமனையை நல்ல விலைக்கு விற்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெருமைப்படுவீர்கள். மனைவி மனதுக்கு இதமாக நடந்து கொள்வதால் மனக்கவலையை மாற்றுவீர்கள். வியாபாரத்தை நுணுக்கமாக நடத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.
பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.




தனுசு ராசி அன்பர்களே!

பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். அரசு ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். ஆன்லைன் வியாபாரத்தை அற்புதமாக நடத்துவீர்கள். பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்வீர்கள். உங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை சகோதரரிடமிருந்து பெறுவீர்கள். மற்றவருக்குச் செய்யும் உதவியால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

பெரிதும் நம்பியிருந்த ஒரு செயல் தாமதம் ஆவதால் தடுமாறுவீர்கள். காலை வாரி விட நினைக்கும் துரோகிகளை அடையாளம் காண்பீர்கள். தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தனியார்துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ள தவறாதீர்கள். சகோதர உறவுகளில் இருந்த சிக்கலை களைவீர்கள். பங்கு வியாபாரத்தில் பதமாக முதலீடு செய்வீர்கள்.அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.




கும்பராசி அன்பர்களே!

கடுமையான நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த விவகாரத்தை தீர்ப்பீர்கள். நோய் குறித்த அச்சத்திலிருந்து விடுபடுவீர்கள். எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், பிளம்மிங் பணியில் ஈடுபடுவோர் அதிக வருமானம் பெறுவீர்கள். வீட்டுமனை வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். துணிவுடன் வேலை செய்வீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

“அண்ணன் என்னடா தம்பி என்னடா” என்று ஆதங்கப்படும் அளவுக்கு சகோதர உறவுகளில் சங்கடத்தை சந்திப்பீர்கள். தொழிலாளர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் புரிந்து கொள்ளாத நிலையால் வேதனை அடைவீர்கள். நல்ல பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க அலைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே லாபம் பெறுவீர்கள்.மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!