gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (11.03.24)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.17 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.43 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

விவகாரங்களை வளர்க்காதீர்கள். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலையை உருவாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க பாடுபடுவீர்கள்.
இன்று விநாயகர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பொறுப்பாக வேலை செய்து பணியிடத்தில் மரியாதையை பெறுவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

தொழிலில் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி பரிசளிப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் வங்கி கடன்களை செலுத்துவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

தொழில் செய்யும் இடத்தில் சிறிய விபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக இரு மடங்கு செலவு செய்வீர்கள். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்யாதீர்கள்.இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காகச் செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக காரியம் செய்யுங்கள்.
இன்று பைரவரை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

நல்ல செய்திகளால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தக்க சமயத்தில் பெறுவீர்கள்.
அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

துலா ராசி அன்பர்களே!

ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். காதலியின் கருத்து அறிந்து நடந்து கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.விநாயகரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். கூட இருந்தே சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை நீக்குவீர்கள். கல்யாண காரியங்களால் வீடு களைகட்டும். காரியத் தடை ஏற்பட்டாலும் இறுதியில் தாண்டி வருவீர்கள்.முருகப் பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சாதனை புரிவீர்கள். வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்கள் . விறுவிறுப்பாக வியாபாரம் செய்து லாபத்தை உயர்த்துவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். செலவு செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோசம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமாக மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் பணத்தை தாராளமாகக் பெறுவீர்கள். வித்தியாசமான முறையில் வியாபாரத்தில் துணிச்சலாக இறங்குவீர்கள். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.சிவபெரு மானை வழிபட சிரமங்கள் குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் அன்பான உதவியை பெறுவீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் செல்வாக்கு அடைவீர்கள்.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!