gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (10.3.24)

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.39 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. இன்று அதிகாலை 04.50 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள்..இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை காண்பீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சனையை தீர்க்க எக்ஸ்ரே எடுப்பீர்கள். காதலிக்கும் பெண்ணிடம் முக்கிய உதவி பெறுவீர்கள்.முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

மிதுன ராசி அன்பர்களே!

என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள். குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். கவனக்குறைவாக வேலை செய்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். .ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.ஷீர்டி சாய்பாபாவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைத் தவிர்த்துவிடலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் திரும்புகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் விபத்து ஏற்பட்டு காயம் அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். சிறியோர்களின் பழக்கத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை. வேங்கடேச பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காதலி உங்கள் கருத்துக்கு எதிராக நடப்பதால் கவலைப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கி பெருமைப்படுவீர்கள். வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலில் எலக்ட்ரீசியன்கள் தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எதிர்கால நலனுக்காக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்வீர்கள்.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக அமையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். மாமியார் மருமகள் சண்டையால் மன நிம்மதியை இழப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
துர்கை வழிபாடு தடைகளைத் தகர்த்து வெற்றி பெற வைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுமாறுவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நெருக்கமான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். பேசும் வார்த்தையில் கோபத்தைக் கலக்காதீர்கள்
குலதெய்வ வழிபாடு இன்றைய தினத்தை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலனை அடைவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள்‌. நினைத்தது நிறைவேற நண்பர்களின் உதவி பெறுவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொண்டு நடப்பதால் மன நிம்மதி அடைவீர்கள்.சிவவழிபாடு சிரமங்களைப் போக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் காண்பீர்கள். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையைக் கோட்டை விடாதீர்கள்.விநாயகரை வழிபட காரியங்கள் தடையின்றி சாதகமாக முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகர ராசி அன்பர்களே!

வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் சாதனை படைப்பீர்கள். பொருளாதாரச் சரிவால் உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். . கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள். வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.பைரவரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

கும்பராசி அன்பர்களே!

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அதையும் தாண்டி அவமானங்களையும் சந்திப்பீர்கள். வேலை விஷயமாக அலைச்சலால் பாதிக்கப்படுவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். வாகனக் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனராசி அன்பர்களே!

ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற நிலையை காண்பீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து மன நிம்மதியை பெறுவீர்கள்.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உற்சாகமாகச் செயல்பட முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!