gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (09.03.24)

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.00 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று காலை 06.58 வரை அவிட்டம். பின்னர் சதயம்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் குறை கூறுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டீர்கள். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பணப்பயிர் விவசாயத்தில் மனம் போல் லாபத்தைப் பெறுவீர்கள். தோப்பு குத்தகையின் மூலமாக வருவாய் பெறுவீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள். புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். ஆசையோடு எதிர்பார்த்த அரசாங்க வேலை கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.
முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.




மிதுன ராசி அன்பர்களே!

குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். திட்டமிட்டு எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள். கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். விரும்பிய பெண்ணுக்கு தங்க நகை வாங்கி கொடுப்பீர்கள். வேலையிடத்தில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடக ராசி அன்பர்களே!

தொழில் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனைவியின் வீட்டாரோடு மல்லுக்கட்டுவீர்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நிலையான வருமானம் இல்லாமல் தடுமாறுவீர்கள். அலுவலகங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். வேலை இடத்தில் விசுவாசமாக இருப்பீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.




சிம்ம ராசி அன்பர்களே!

தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி நல்ல முடிவை எட்டுவீர்கள். மைத்துனரின் உதவியால் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். மனம் விரும்பும் பெண்ணை எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த அளவு அரசாங்க உதவி பெற மாட்டீர்கள். கடினமாக உழைத்து வியாபார இலக்கை எட்டுவீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அசதியை பார்க்காமல் கடுமையாக வேலை செய்வீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்வீர்கள். உடல் சோர்வு, மனச்சோர்வால் பாதிக்கப்படுவீர்கள். திடீர் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள்.
வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.




துலா ராசி அன்பர்களே!

வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள். சொந்தமாக சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள். சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீர்ப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். தொழில்துறையை நிலைநிறுத்த திட்டம் போட்டு செயல்படுத்துவீர்கள்.பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.




தனுசு ராசி அன்பர்களே!

நெருங்கிய உறவினர் வீட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். மனத் தைரியத்தோடு வேலையில் ஈடு படுவீர்கள். அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யும்போது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். கணினித்துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். தொழில் எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள்.
இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். அரசு வேலையில் ஊதிய உயர்வோடு இடம் மாறுதலும் அடைவீர்கள். பழங்கள், காய்கறிகள் வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவீர்கள்.அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.




கும்பராசி அன்பர்களே!

வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்காமல் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் மனைவிக்கு மருத்துவ செலவு செய்வீர்கள். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள். பொறாமைப்பட்ட உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

அண்டை வீட்டாரிடம் அன்பாக நடந்து கொல்வீர்கள். மனதில் உள்ளதை தெளிவாக மனைவியிடம் எடுத்துச் சொல்லுவீர்கள். ஐடி ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சிக்கலை சந்திப்பீர்கள். பேஸ்புக்கில் பழகிய பெண் நண்பரால் ஏமாற்றப்படுவீர்கள்.
மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!