gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (08.03.24)

சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே!

ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொண்ட வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும்.பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் கண்டுபிடிப்பீர்கள்.இன்று சிவபெருமானை வழிபடலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கவலை தரும் நாளாக இருக்கும். பணியிடத்தில் தேவையற்ற சர்ச்சைகள் எழலாம். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். இன்று சிவ பூஜை, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நற்பலனை தரும்.இன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.




மிதுன ராசி அன்பர்களே!

வியாபாரத்தில் உங்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பங்கு சந்தை முதலீடு, தொழில் முதலீடுகளில் நல்ல லாபத்தை பெறலாம். உற்சாகத்தர்களுக்கு புதிய பதவிகள், மரியாதை கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வெளி ஆட்களின் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்தில் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் திருமண விஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் இன்று எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன், துறை நிபுணர்களின் சரியான ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையான பலன்கள் கிடைக்கும். என்று ஆடை, ஆபரணம் வாங்க நல்ல வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையால் கவலை அடைவார்கள். வியாபாரத்தில் உங்களின் விருப்பப்படி அனுகூல பலன்களை பெறுவீர்கள். என்று இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியது இருக்கும். சிவ வழிபாடு செய்யவும். சிவபெருமானை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரம் சற்று மந்தமானதாக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட வேலையை இன்றைய செய்து முடிக்க முயலவும். தள்ளிப்பட வேண்டாம். கடினமான சூழ்நிலையிலும் நிம்மதி கிடைக்கும். இன்று பணம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து மீள்வீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதும் குறையும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக்கூடும். கவனம் தேவை.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.




துலா ராசி அன்பர்களே!

புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையை செய்வதை தவிர்க்கவும். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை சில விட வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று வருமானம் உயரும் . லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொழில், வேலை தொடர்பான திட்டங்கள் நல்ல பலனைத் தரும். வேலை மாற திட்டம் இடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும். முதலீடு தொடர்பான திட்டங்களில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனதில் இருக்கும் பிரச்சனைகள் சிலருடன் பேசி தீர்வு காண்பீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.




தனுசு ராசி அன்பர்களே!

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவவியல் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நாளாக இருக்கும். என்று உங்களுக்கு இனிமையான சூழல் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

 உங்களின் ஆரோக்கியத்தின் கவனம் தேவை.. உங்களின் அன்றாட செலவுகளை சமாளிப்பதில் சோர்வடைவீர்கள். வண்டி, வாகன பயன்பாட்டில் நிதானம் தேவை. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்ப உறுப்பினர் கூட தான் நிதானமாக பேசுவது அவசியம். என்று எந்த ஒரு சர்ச்சையிலும் ஈடுபட வேண்டும்.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.




கும்பராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் துணையின் முழு ஆதரவையும், தோழமையும் பெறுவீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இன்று திட்டமிட்டு செலவு செய்வதும், முதலீடு, சேமிப்பது நல்லது. இன்று நீங்கள் கொடுத்த கடன் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

வேலை தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவாகும். புதிய வீடு, மனை,வாகனம் வாங்க முயற்சிகளுக்கு சாதகமான நாளாக இருக்கும். என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். பணியிடத்தில் சூழல் அழுத்தமாக இருந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள். கடன் பிரச்சனை தீர சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் செய்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!