gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (06.03.24)

சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்துவோம். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். நீங்கள் செய்யக்கூடிய தவறுகள், தாமதங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும். சகோதர, சகோதரிகளின் உதவி எளிதில் கிடைக்கும். இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைகிறது. இன்று எந்த ஒரு ஆபத்தான வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். வீட்டை புதுப்பித்தல், சில தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிலவை வந்த சற்று உங்களை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செயல், வார்த்தைகளில் நிதானமும், இனிமையும் பராமரிக்கவும். உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்யவும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி அன்பர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கௌரவம் சமூகத்தில் உயரும். உங்களின் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள சில பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிரிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வேலை, தொழில் தொடங்குவதற்கு சிறப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட நிலுவையில் உள்ள வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும்.மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடக ராசி அன்பர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணம் தொடர்பான விஷயங்களில் இன்று சாதக பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பம், பண நற்பெயர் உயரும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு, உங்களுக்கான துணை தேடி வரும். என்று மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய நாள்.தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் இருப்பீர்கள். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும். மற்றவர்களிடம் நிதானமாக பேசுவதும், பழகுவதும் நல்லது. எந்த ஒரு முதலீடு விஷயத்திலும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு சற்று பலவீனமான நாளாக இருக்கும்.இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. முதலீடு செய்ய நினைப்பவர்கள் நல்ல லாபத்தை பெறலாம். சமூகப் பணிகள், பொறுப்புகளை நிறைவேற்ற ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்களின் தடைப்பட்ட வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பழைய நம்பரை சந்தித்து மன மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

முன்னேற்றம் தரக்கூடிய நாள். இன்று நீங்கள் குடும்ப பொறுப்புக்கள் குறித்து கவலைப்படுவீர்கள். என்று உங்கள் இயல்பில் கோபமும், எரிச்சல் தன்மை இருக்கும். இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களிடம் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் சங்கடத்தை தருவதாக இருக்கும். அதனால் பேச்சில் இனிமையும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தும் நடந்து கொள்ளவும். விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

அரசியல் தொடர்பான நபர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட காரியங்கள், லட்சியங்கள் நிறைவேறும். உங்களின் மதிப்பு மரியாதை மேம்படும். கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். அதற்காக பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் துணையுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் நிதானம் தேவை. தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்த மகிழ்ச்சி பெருகும். இன்று பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

உங்களின் செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். உங்கள் துணைக்காக பரிசு பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

உங்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆவணங்களைச் சரி பார்ப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் பேச்சால் பிறரின் மனதை வெல்வீர்கள். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான பலன்கள் கிடைக்கும்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பப் பிறப்புகளை சிறப்பாக கையாண்டு நற்பெயர் பெறுவீர்கள். என்று உங்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. உங்களின் குடும்பம் மற்றும் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும்.மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!