gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (05.03.24)

இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷப ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் தங்கள் துணையுடன் உறவு பலப்படும். உங்களின் நிதி நிலைமை குறித்து கவலை ஏற்படும். புதிய முதலீடு விஷயங்களில் கவனம் தேவை.. பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்கலாம்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

முன்னேற்றமான நாளாக இருக்கும். கூடுதல் ஆற்றலுடன் உழைப்பீர்கள். ஆனால் உங்கள் வேலை சிறப்பாக முடிவடையும். இன்று கோபத்திலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் காரியம் அனுகூலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் தொழில், வேலை குறித்து கவலைப்படுபவர்கள். பணியிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை தீரும். உங்களின் நண்பர்களை சந்தித்து மன மகிழ்வீர்கள். என்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் விஷயத்தில் கவனம் தேவை.அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

கடக ராசி அன்பர்களே!

பிரச்சனை நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மன வருத்தம், பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். உடல் நலக் கோளாறு தொந்தரவு செய்யும். அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே!

முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள். மேலதிகாரிகளின் அன்பை எண்ணி ஆச்சரியப்படுவீர்கள். தந்தையாரின் பல் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாகத் தீர்வு காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

ஆடை ஆபரணங்கள் வாங்கி மனைவி மக்களை அசத்துவீர்கள். புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் பெறுவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். கணவனின் மனம் கோணாமல் மனைவியும் மனைவியின் மனம் சுருங்காமல் கணவனும் கவனமாக நடந்துகொள்வீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அனைவரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். நண்பரின் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலம் அடைவீர்கள். வேலைக்காகக் காத்திருப்பவர்களின் கனவு நனவாகும். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள். சிறு,குறு வியாபாரிகள் வளர்ச்சி காண்பீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வளர்பிறை சந்திரனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் தேவையில்லாத டென்ஷன் அடைவீர்கள். மருத்துவத்திற்கு அதிகம் செலவு செய்வீர்கள். தொழில் துறைகளில் மந்தமான நிலையை காண்பீர்கள். உருக்கமாக பேசி உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். முருகப்பெருமான் வழிபாடு நன்று.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறாதீர்கள். பயணங்களின்போது எச்சரிக்கையாக இருங்கள். சிறு விபத்துக்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை உரிய நேரத்தில் பெறுவீர்கள். உறவினர்களும் உங்களுக்கு உதவும் எண்ணத்தில் இருப்பார்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

மற்ற நாட்களை விட இன்று சிறப்பானதாக இருக்கும். உடல் நல குறைபாடு சற்று தடுமாற்றத்தை தரும். முதலீடு விஷயங்களில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலைக்கு பாராட்டு கிடைக்கும். இன்று சரியாக திட்டமிட்டு எந்த ஒரு வேலையும் செய்யவும்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு இன்று பிரச்சனை நிறைந்த நாளாக இருக்கும். சக ஊழியர்களால் சில வேலைகளில் இடைவெளி ஏற்படக்கூடும். மனக்கவலை ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் பேசி தீர்ப்பீர்கள். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். அரசு வேலை செய்யக்கூடியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆற்றலை நல்ல விஷயங்களை பயன்படுத்தவும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பெற்றோருடன் மனப் பிணக்குகள் தீரும். என்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!