gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (03.03.24)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.32 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று காலை 11.50 வரை அனுஷம். பின்னர் கேட்டை. அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷ ராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறை சந்திப்பீர்கள். அஷ்டம சந்திரனால் அவஸ்தைப்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். வண்டி வாகனங்களில் போகும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

வியாபாரத்திற்கு தேவையான நல்ல செய்திகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். தொழிலில் உருவாகும் போட்டிகளை சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவீர்கள். காதலி மனதை கொள்ளை அடிப்பீர்கள்.
இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு  மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

வியாபாரத்திற்கு தேவையான நல்ல செய்திகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். தொழிலில் உருவாகும் போட்டிகளை சுலபமாக முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவீர்கள். காதலி மனதை கொள்ளை அடிப்பீர்கள்.
இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

நெருஞ்சி முள்ளைப் போல ஒரு கவலை நெஞ்சில் உறுத்துவதால் உறக்கமிழப்பீர்கள். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி அடைவீர்கள். தேவைக்காக அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் வாங்க பாடுபடுவீர்கள். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவீர்கள். வீண் வாக்குவாதங்களில் இறங்கினால் அவமானப்படுவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

முயற்சி செய்யாமலேயே முன்னேற்றப் பாதைகளின் கதவுகளை திறப்பீர்கள். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி மகிழ்ச்சி அடைவீர்கள். பணியாளர்கள் கனிவுடன் கவனிக்கப்படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டால் மிகுந்த உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாக தீர்வு காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து மனைவி மக்களை அசத்துவீர்கள். புதிய பொருட்களால் வீட்டை அலங்கரிப்பீர்கள். உரிய நேரத்தில் உறவினர்களின் உதவி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் தட்டாமல் பணம் கிடைத்து வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். அனைவரையும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வைப்பீர்கள். நண்பரின் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலை கிடைத்து பணியில் அமர்வீர்கள். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் பெறுவீர்கள்.
இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வளர்பிறை சந்திரன் உதவியால் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். கடின உழைப்புக்குப் பிறகு வெற்றி பெறுவீர்கள். பணியாளர்கள் டென்ஷனாக இருப்பீர்கள். மருத்துவச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். அலைச்சல் மிகுதியால் தூக்கத்தை இழப்பீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் குழப்பம் அடைவீர்கள்
முருகப்பெருமானை  வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

 

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் விபத்தை சந்திப்பீர்கள். நண்பர்களின் ஆதரவை நல்ல முறையில் பெறுவீர்கள். தாயாரின் கால் வலிக்காக ஸ்கேன் எடுப்பீர்கள். கடமைக்காக வேலை செய்யாதீர்கள். பண இழப்பை தவிர்க்க பக்குவமாக நடந்து கொள்வீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால்  மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

நீண்டகால திட்டத்தை இன்று நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சியை நடத்துவீர்கள். கோயில் தரிசனங்களுக்காக குடும்பத்துடன் செல்வீர்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். பொருட்கள் விற்பனையால் வியாபாரிகள் புது உற்சாகம் அடைவீர்கள். சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட  இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

கண்ணை மூடிக்கொண்டு காரியம் செய்தாலும் விண்ணைத் தொடும் வெற்றி பெறுவீர்கள். கையில் காசு பணம் தாராளமாக புழங்குவதால் ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். சாதுரியமான செயலால் தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். வேலைத் திறமையால் பணியாளர்கள் மதிப்பை உயர்த்தி கொள்வீர்கள். எதிரிகளை முறியடித்து ஓட வைப்பீர்கள்.
இன்று அம்பிகையை  வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

எச்சரிக்கையாக செயல்படாவிட்டால் உறவினர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுப்பீர்கள். வேலை காரணமாக அலைபவர்கள் வேளை தவறாமல் சாப்பிட தவறாதீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். நல்லது செய்வதாக எண்ணி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். தொழிற்சாலை இயந்திரங்களில் வேலை செய்யும்போது மனதை அலைபாய விடாதீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!