gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (01.03.24)

இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். மீன ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

அதாவது மீன ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், பணத்தைச் சேமிக்க திட்டமிடலாம். மூத்தவர்களிடம் பேசும்போது, இனிமையும், கணிவும் தேவை. உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் உயர்கல்வியில் மேன்மை அடைவீர்கள்.மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். புதிய பதவி கிடைக்கும். தொழிலை மாற்ற நினைப்பவர்கள் அவசரப்பட வேண்டாம். பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.




மிதுன ராசி அன்பர்களே!

இன்று உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும் நாள். உங்கள் குழந்தையின் திருமணம் தொடர்பான ஏதேனும் தொந்தரவுகள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று பணியிடத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை முடிப்பதில்,, சகோ ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உங்களின் ஆரோக்கியத்தை கவனமாக இருக்கவும். உடல்நிலை பிரச்சினை காரணமாக வேலையை முடிப்பதில் தொய்வு ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு போட்டி, தேர்வுகளில் சிறப்பான வெற்றியை பெறலாம். தொழில் செய்யக் கூடியவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இல்லற வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக முதலீடு செய்ய நினைப்பீர்கள். இன்று உங்களின் பொறுப்பு உணர்ந்து செயல்படுவோம்.முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு நிதி வசதிகள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்கள் மற்றவர்களின் ஆதரவையும், வெற்றியையும் பெறலாம். இன்று உங்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மன எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும்.துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் மிகவும் கவனம் தேவை. இல்லையெனில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலருடன் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடியவர்கள் வேலையில் கவனம் தேவை. நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அனுசரித்து செல்ல வேண்டிய தினம். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை.சிவபெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.




துலா ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு கலவையான பலன்களை தரும் நாளாக இருக்கும். நீங்கள் வியாபாரத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும் பணியிடத்தில் உள்ள மீது பொறுப்புகளின் சுமையை அதிகரிக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் அன்றாட தேவைக்காக அதிக பணத்தை செலவிட நேரிடும். இன்று முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும்.சுதர்சனர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை, அறிவுரைகளை கொடுக்க வேண்டாம். உங்களின் உடல் நல பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம். பணியிடத்தில் சகோதரர்கள் இடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். இதனால் கடினமான வேலைகளை கூட எளிதாக முடிக்க முடியும். இன்று வேலை தொடர்பான கடின சூழ்நிலைகளை சமாளிக்க, உங்கள் துணையை அன்பான வார்த்தைகள் உதவும்.துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.




தனுசு ராசி அன்பர்களே!

தனுசு ராசியினருக்கு நம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும். யாரையும் நம்பி இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து குடும்பச் சூழல் இனிமையாக மாறும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. வண்டி, வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள அவர்களுக்கு அதற்கான நல்வாய்ப்புகள் அமையும். உங்கள் வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

தனுசு ராசியினருக்கு நம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும். யாரையும் நம்பி இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து குடும்பச் சூழல் இனிமையாக மாறும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. வண்டி, வாகனம் வாங்க திட்டமிட்டுள்ள அவர்களுக்கு அதற்கான நல்வாய்ப்புகள் அமையும். உங்கள் வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.மகாவிஷ்ணுவை வழிபடு வதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.




கும்பராசி அன்பர்களே!

இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குக் கடினமான நாளாக இருக்கும். உங்களின் தடைப்பட்ட வேலைகளை செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். திட்டமிட்டபடி வேலைகள் முடியாமல் மனம் கலக்கம் அடையும். உடல்நல பிரச்சினை கவலை தருவதாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக முடிவெடுத்து செயல்படுவீர்கள். இது மனதிற்கு பெரிய அளவில் நிவாரணம் தரும். வேலை தேடக்கூடியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். நீங்கள் விரும்பிய சில விஷயங்களை செய்து திருப்தி அடைவீர்கள்.அம்பிகை யை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபத்தை, பதவியை பெற்று தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் இணக்கமாகப் பேசவும். உங்கள் வேலைகள் எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை மாற நினைப்பவர்கள், புதிய வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று உங்களின் பணபலம் அதிகரிக்கும். வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.தட்சிணாமூர்த்தியை வழிபடு வதன் மூலம் காரியத்தடைகள் விலகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!