தோட்டக் கலை

மாடித் தோட்டத்தில் செய்ய கூடாதவை

நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,…

தொட்டியில் செடி வளர்க்க ஆசைப்படுபவர்கள் அந்த தொட்டியில் சிறிது மண்ணை போட்டு அதில் விதையையோ அல்லது சிறு செடியையோ வைத்து அறைகுறையாக கவனித்தால் கூட அதில் ஒரு செடி உயிராக தோன்றிவிடும்.

அந்த பூ-தொட்டியே உங்கள் உயிரை பறிக்கும் என்றால், நம்புவீர்களா?

நம்புங்கள்!.. தொட்டியில் செடி வைத்தால் மட்டும் போதாது, அந்த தொட்டியை எங்கு வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் வேண்டும்.

வீட்டின் மாடியில் தொட்டியில் செடி வைப்பவர்கள் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும், அதிக காற்று அடிக்கும் பொழுது, பூசெடியில் இழைகள் அதிக அளவு வளர்ந்திருப்பின் அவை, காற்றினால் தள்ளப்படலாம். அதனால், பூந்தொட்டி மாடியில் இருந்து கீழே விழலாம்… அது நீங்கள் மழை வருகிறது என்று வெளியே காயப்போட்ட துணியை எடுக்க சென்று திரும்பும் பொழுது  கூட கீழே  விழலாம்.




அப்படி தான் நான் வைப்பேன் என்று அடம் பிடித்தால், தொட்டியை கீழே விழாமல் தடுக்க, கம்பி அல்லது கம்பு/குச்சி கொண்டு ஒரு தடுப்பான் அமையுங்கள், கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பது போல…

அதனால், தொட்டியை மாடியில் சுவற்றின் மேல் வைக்காமல், சுவற்றை ஒட்டியவாறு, சுவற்றிற்கு அருகில் வையுங்கள்.!!! கீழே உள்ள புகைபடத்தில் இருப்பது போல்…

விளையாட்டிற்கு அல்ல! கவனத்தில் கொள்ளவும்!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!