Entertainment lifestyles News

மனதில் வந்த விரக்தியில் உருவான ஸ்நாப்டீல் சாம்ராஜ்யம்..

ஸ்நாப்டீல் எனப்படும் இ-காமர்ஸ் தளத்தின் சக்சஸ் ஸ்டோரி இது. ஒரு பிசினஸ் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குனால் பாஹ்ல் மற்றும் அவரது பார்ட்னர் ரோஹித் பன்சால் எப்படி இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினர் என்ற வரலாறு தொழில்முனைவோருக்கு கண்டிப்பாக ஒரு ஊக்க சக்தியாக இருக்கும்.




Snapdeal - Success Story of India's Leading Pure-Play Value Platform!

டெல்லியில் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதியன்று பிறந்தவர் குனால் பாஹ்ல். ஆர்.கே.புரத்தில் உள்ள தில்லி பப்ளிக் ஸ்கூலில் படித்தார். இளம்வயதிலேயே குனாலிடம் தலைமைப்பண்புகளும், தொழில் ஆர்வமும் நிறைந்து காணப்பட்டன.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் அமெரிக்காவின் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேனுஃபேக்சரிங் இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பை படித்தார். அப்போது அவர் தொழில்முனைவதிலும், பிசினஸ் மேனேஜ்மென்ட்டிலும் அதிக ஆர்வம் காண்பித்தார்.

பின்னர் அவர் தி வார்டன் ஸ்கூலில் எம்பிஏ முடித்தார். அங்குதான் பிற்காலத்தில் அவருடன் பார்ட்னர் ஆன ரோஹித் பன்சாலை சந்தித்தார். 2020 ஆம் ஆண்டில் பாஹ்ல் மற்றும் பன்சாலும் சேர்ந்து ஸ்நாப்டீல் எனப்படும் இ-காமர்ஸ் தளத்தை தொடங்கினர். இந்த தளம் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் மார்க்கெட் தளமாக பின்னர் மாறியது.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிப்புகளை வாங்குவதற்கான கட்டமைப்பு இல்லாததால் ஏற்பட்ட விரக்திதான் பாஹ்லுக்கு ஸ்நாப்டீலைத் தொடங்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. எனவே இந்த இடைவெளியைப் போக்க வேண்டும் என்ற முடிவோடு பாஹ்லும் பன்சாலும் இணைந்து தங்களது தொழில் பயணத்தைத் தொடங்கினர்.




ஸ்நாப்டீல் தொடங்கப்பட்ட ஆரம்பக்காலங்களில் அது நிறைய சவால்களை சந்தித்தது. ஏற்கனவே வர்த்தகத் துறையில் காலூன்றி இருந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுப்பதற்கு பாஹ்லும் பன்சாலும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இருந்தாலும் அவர்களது விடாப்பிடியான மனஉறுதியும், புதுமையான அணுகுமுறையும் அவர்களை இந்த முட்டுக்கட்டைகளைக் கடக்க உதவியது.

போட்டியை ஈடுசெய்யும் விலையில் ஏகப்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய வகையில் ஸ்நாப்டீல் தனித்து நின்றது. அத்துடன் மிகச் சிறப்பான கஸ்டமர் சர்வீஸ் உறுதுணையாக நின்றது. முக்கியமான பார்ட்னர்ஷிப்கள், தீவிரமான மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்கள் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் வாயிலாக ஸ்நாப்டீல் அசுர வேகத்தில் இந்திய மக்களிடையே பிரபலம் அடைந்தது.




எலக்ட்ரானிக்ஸ், பேஷன், வீட்டு அத்தியாவசிப் பொருட்கள் இன்னும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஏராளமான பொருட்களை இந்த தளம் அளித்தது. பாஹ்லின் தலைமையின்கீழ் ஸ்நாப்டீல் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து பிரபலமான வென்சர் காபிடலிஸ்ட்களிடமிருந்து நிறைய முதலீடுகளை பெற்றது. இதன்மூலம் இந்திய இ-காமர்ஸ் துறையில் ஸ்நாப்டீல் அளித்த பங்களிப்புக்கு உரிய பாராட்டையும் பெற்றது. பாஹ்லின் தொலைநோக்கு சிந்தனையும் சிறப்புத்தன்மைக்கு தந்த அயராத அர்ப்பணிப்பும் ஸ்நாப்டீலை இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்தியது.

குனால் பாஹ்ல்சின் ஸ்நாப்டீல் நிறுவனம் ஆர்வமிக்க தொழில்முனைவோருக்கு ஒரு உத்வேகமாக விளங்கியது. தொலைநோக்கு சிந்தனையின் சக்தி, விடாமுயற்சி, புதுமை ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமான தொழிலை நிறுவலாம் என்பதை நிரூபித்தது.




வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்தை தரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள ஈடுபாடு, வியாபாரிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவை இந்திய இ-காமர்ஸ் துறையில் ஒரு நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

எளிமையான ஒரு தொடக்கத்தில் இருந்து பில்லியன் டாலர் கம்பெனியாக ஸ்நாப்டீலை நிறுவியது பாஹ்லின் வாழ்க்கைப் பயணமாக இருந்தது. இது ஆர்வம் இருந்தால் எந்தவொரு வாய்ப்பையும் வெற்றியாக மாற்றலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஸ்நாப்டீல் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்திய வணிகத் துறையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக குணால் பாலின் பங்களிப்பு வேரூன்றி உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!