gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தூய்மையான திரௌபதி (விளக்கம்)

ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையானதாகும்

ஐவருக்கு ஒருத்தியை திருமணம் செய்தல் என்பது நிச்சயம் அசாதாரணமான ஒரு செயல். அத்தகு செயல், பொதுவாக தர்மத்திற்கு விரோதமானதாக கருதப்படுவது உறுதி. அவ்வாறு இருக்கையில், தர்மத்தை போதிக்கும் மஹாபாரதத்தில், ஐந்து முக்கிய கதாபாத்திரங்களின் மனைவியாக ஒருத்தி இருப்பது நிச்சயம் விவாதத்திற்கு உரிய விஷயமே. நாம் நமது குறுகிய அறிவைக் கொண்டு விவாதிப்பதற்குப் பதிலாக, மஹாபாரதத்திலேயே இதுகுறித்து நிகழ்ந்த விவாதத்தினை அறிதல் நலம் தரும்.

Draupadi Mahabharat Story,மகாபாரதத்தில் வரும் திரௌபதியைப் பற்றி அறிந்திராத உண்மைகள் - 14 கணவர்களை கேட்ட திரௌபதி - unknown facts about draupadi from mahabharat : sexual life of ...

திரௌபதியின் தந்தையான மன்னர் துருபதரால் தனது மகள் ஐந்து சகோதரர்களுக்கு மனைவியாவதை ஏற்க முடியவில்லை. அவர் மன்னர் யுதிஷ்டிரரிடம் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்: “மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனின் மனைவியை மகளைப் போன்று மதிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளைய சகோதரனின் மனைவியைத் தொடுதல் மகளைத் தொடுவதற்கு சமம். ஒரு மன்னன் பல இராணியரை.




மணந்து கொள்ள அனுமதி உள்ளது, ஆனால் பல மன்னர்கள் ஒரு இராணியை மணந்து கொள்வது எங்கும் அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மிகவும் கௌரவமானவரும் தர்மத்தின் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவரும் ஆயிற்றே. நீங்கள் எவ்வாறு இவற்றை மீறலாம்?”

துருபதருக்கு யுதிஷ்டிரர் வழங்கிய பதில்: “நல்லொழுக்கம் மிகவும் சூட்சுமமானது. நான் எனது வாழ்வில் ஒருபோதும் பொய் பேசியதில்லை, எனது மனம் ஒருபோதும் பாவத்தைத் தீண்டாது, நான் என்றுமே தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்டதும் இல்லை. இந்த திருமணத்தில் நான் எந்த பாவத்தையும் உணரவில்லை. கௌதம முனிவரின் குலவழியில் வந்த ஜதிலா என்ற பெண் சப்தரிஷிகளை மணந்தாள். மேலும், பிரசேதி என்னும் பெண் பத்து பிரசேதர்களை மணந்தாள். இந்த உதாரணங்கள் வேதங்களில் உள்ளன. இவை பாவமாக கருதப்படவில்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உயர்ந்த தர்மத்தைக் காப்பதற்காக சில சட்டங்களை மீறலாம். திரௌபதியை நாங்கள் ஐவரும் மணக்க வேண்டும் என்பது உயர்ந்த தர்மமாகவும் அரிதான ஒன்றாகவும் ஏற்கப்படலாம்.”

யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார்.




யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார்.

பாண்டவர்கள் ஐவரும் தமது முற்பிறவியில் தேவர்கள் என்பதை எடுத்துரைத்த வியாஸதேவர், துருபத மன்னருக்கு தெய்வீகப் பார்வையை வழங்கி, பாண்டவர்கள் முந்தைய பிறவிகளில் எப்படி இருந்தனர் என்பதைக் காட்டினார். ஆச்சரியமடைந்த துருபத மன்னர் கூப்பிய கரங்களுடன், “மிகவுயர்ந்த முனிவரே, தங்களுடைய அறிவிற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு எதுவும் இல்லை. என் மனம் இப்போது அமைதியடைந்து விட்டது. மேலுலகத்தில் என்ன முடிவு செய்தார்களோ அது நடந்தே தீரும். விதியின் கைகளில் நாங்கள் கருவிகளே. எனது மகள் ஐந்து சகோதரர்களையும் கணவர்களாக ஏற்றுக் கொள்ளட்டும்,” என்று கூறி அனுமதி வழங்கினார்.

ஐந்து கணவன்களைப் பெற்ற திரௌபதி, ஒரு கணவனிட மிருந்து அடுத்த கணவனிடம் செல்லும்போது மீண்டும் கன்னித் தன்மையைப் பெறும் வரத்தையும் பெற்றிருந்தாள். அவள் பாண்டவர்களுக்கு மத்தியில் சற்றும் பாரபட்சம் பார்க்காமல் தொண்டு செய்தாள். மிகவும் துன்பமான காலத்திலும் பாண்டவர்களுடன் காடுகளில் வாழ்ந்தாள். எந்தவித சுயநலமும் இல்லாமல் அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் தந்தாள், தேவைப்பட்டபோது அவர்களைச் செயலாற்றவும் தூண்டினாள். துன்பங்களும் ஆபத்துக்களும் வந்த நேரத்தில்கூட அவள் தைரியமாகவும் தீர்மானமாகவும் வாழ்ந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்து தூய பக்தியுடன் வாழ்ந்து வந்தாள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!