Cinema Entertainment

பாடல் பிறந்த கதை/என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

நாடக கலைஞராக நாடகங்களில் நடித்து வந்த நடிகர் எம்ஜிஆர் படிப்படியாக முன்னேறி சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிகராக நடிக்க துவங்கினார். அப்போது ஏற்பட்ட பல சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி தனது விடாமுயற்சியின் மூலமாக மிகப்பெரிய ஹீரோவாக பிரபலம் அடைந்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். அதை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராகவும் ஆட்சி அமைத்து தமிழ் சினிமாவையே தன் கைக்குள் வைத்திருந்தார் எம்ஜிஆர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கொள்கையே கடவுள் மறுப்பு தான் ஆனால் எம்ஜிஆர் அவர்கள் அடிக்கடி மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.




நடிகர் எம்ஜிஆர் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி மிகச்சிறந்த மனிதராக வலம் வந்தாலும் கட்சியில் அவருக்கு எதிராக பல சதி வேலைகள் நடந்திருந்தது. சினிமாவில் ஆக்டிவாக பல படங்களில் நடித்து வந்த எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கொள்கையே கடவுள் மறுப்பு தான்.

ஆனால் எம்ஜிஆர் அருள் பக்தியுடன் இருந்தார். இதனால் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது அவரது வழக்கமாக இருந்தது. எம்ஜிஆர் போலவே சிவாஜியும் திமுகவின் முக்கிய பொறுப்பாளராக இருந்தபோது ஒரு முறை அவர் திருப்பதி சென்று வந்துள்ளார். அன்றிலிருந்து கட்சிக்கு அவரை பிடிக்காது. கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் கட்சியில் இருந்து கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார் சிவாஜி. அவர் கட்சியின் கொள்கைகளை மீறிவிட்டார் என்று கூறி அவருக்கு எதிரான சதி வேலைகளை செய்ததால் சிவாஜி கட்சியில் இருந்து விலகிவிட்டார்.




அதேபோல் கட்சியில் தலைவர் அண்ணாவிற்கு அடுத்து எம்.ஜி.ஆர் தான் என்ற நிலை இருந்தபோது அவரை கட்சியிலிருந்து நீக்கும் முயற்சியாக எம்ஜிஆரை பிடிக்காதவர்கள் அவர் கோவிலுக்கு செல்வதை சுட்டி காட்டி கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் பணத்தோட்டம் என்ற படம் தயாராக இருந்தது. கே சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் முதற்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த படத்தின் மையக்கதை கள்ள நோட்டு அடிக்கும் கும்பல் செய்யும் தவறுகள் நாயகன் மீது தவறாக விழுந்து விடுகிறது. அவர் மீது ஊர் மக்கள் அனைவரும் சந்தேகம் பட ஹீரோயின் அம்மா மற்றும் காதலி மட்டும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இப்படி  படத்தில் கதையின் சூழ்நிலை குறித்து  கவிஞர் வைரமுத்துவிற்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.




அப்போது அருகில் எம்ஜிஆர் சோகத்தில் அமைந்திருக்க அவரிடம் என்ன நடந்தது என விசாரிக்கிறார் கண்ணதாசன். உடனே எம்.ஜி.ஆர் கட்சியில் தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளை குறித்து சொல்கிறார். மேலும் அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும், இந்த படத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவும் ஒரு பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் எம்ஜிஆர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன என்று எம்ஜிஆர் இடம் கண்ணதாசன் கேட்கிறார். எனக்கு இதைப் பற்றி கவலை இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று எம்ஜிஆர் சொல்கிறார். அப்போது இரண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு கண்ணதாசன் ஒரு பாடலை கொடுக்கிறார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் என்று எழுதப்பட்ட அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அடைந்தது. மேலும் எம்ஜிஆர் பற்றி குறை சொன்ன அனைவருக்கும் இந்த பாடல் ஒரு பதிலடியாக அமைந்திருந்தது.




பாடல் வரிகள் இதோ:

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

ஆண் : பின்னாலே தெரிவது அடிச்சுவடு…
முன்னாலே இருப்பது அவன் வீடு…
பின்னாலே தெரிவது அடிச்சுவடு…
முன்னாலே இருப்பது அவன் வீடு…

ஆண் : நடுவினிலே நீ விளையாடு…
நல்லதை நினைத்தே நீ போராடு…




ஆண் : நல்லதை நினைத்தே போராடு…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

ஆண் : உலகத்தில் திருடர்கள் சரி பாதி…
ஊமைகள் குருடர்கள் அதி பாதி…
உலகத்தில் திருடர்கள் சரி பாதி…
ஊமைகள் குருடர்கள் அதி பாதி…

ஆண் : கழகத்தில் பிறப்பதுதான் நீதி…
மனம் கலங்காதெ மதிமயங்காதே…
கலங்காதெ மதிமயங்காதே…




ஆண் : கலங்காதெ மதிமயங்காதே…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…

ஆண் : மனதுக்கு மட்டும் பயந்துவிடு…
மானத்தை உடலில் கலந்துவிடு…
மனதுக்கு மட்டும் பயந்துவிடு…
மானத்தை உடலில் கலந்துவிடு…

ஆண் : இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு…
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…

ஆண் : இரண்டினில் ஒன்று பார்த்துவிடு…

ஆண் : என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே…




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!