Beauty Tips

பளிச்சென மின்னிட சில அழகு குறிப்புகள்!

பெண்களுக்கான அழகுப் பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனையாவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முகப் பூச்சுகள்தான். இப்பொழுது ஆண்களும் பெண்களுக்கு நிகராக இம்மாதிரி முக பூச்சுக்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இவ்வகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சருமத்தை பொலிவாக்கலாம். இதனால் சருமத்திற்கு ஒரு விதமான பாதிப்பும் ஏற்படாது.




ரு ஸ்பூன் டீத்தூளை சிறிது நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிது அரிசி மாவு சிறிது தேன் கலந்து முகத்தில் பேக் போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட பளிச்சென துடைத்து வைத்த விளக்காக மின்னும் முகம்.

காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் எடுத்து பஞ்சு தொட்டு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கடலை மாவு தேய்த்து முகம் கழுவி விட பளிச்சென்று இருக்கும்.

லிவ் எண்ணெயை சிறிது எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

குங்குமப்பூவை சிறிது பாலில் குழைத்து முகத்தில் தடவி பேக் போடவும். காய்ந்ததும் சிறிது அரிசி மாவு கொண்டு முகத்தை மேல் நோக்கியவாறு தேய்த்து கழுவ பளிச்சென மின்னும் சருமம்.




ந்தன பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெயை கலந்து முகம் கழுத்துப் பகுதிகளில் தடவி காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ நல்ல பலன் தெரியும்.

நான்கு கப் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்து எடுத்து அத்துடன் சிறிது புதினா இலைகளை கையால் கசக்கி சேர்த்து அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஆவி பிடிக்க முகம் பளிச்சிடுவதுடன் தலைவலி மூக்கடைப்பு போன்றவையும் குணமாகும்.

முகப் பூச்சுகள்...

ஞ்சளில் இருக்கக்கூடிய ஆன்ட்டி செப்டிக் பண்புகள் நம் சருமத்தை பாதுகாக்கும். ஒரு துண்டு வெள்ளரி பிஞ்சை எடுத்து அரைத்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக  போட்டு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விட பளிச்சென்று ஆகிவிடும்.

வேப்பிலை சிறிது ஓட்ஸ் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு ஸ்பூன் மூன்றையும் மிக்ஸியில் சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பளிச்சென மின்னும்.

முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு காரணம் சருமத்தில் அதிக அளவு எண்ணெய் சுரப்பு, அதிகமாக மேக்கப் போடுதல், தூசிகள் மற்றும் அழுக்குகளால் முக துவாரங்கள் அடைத்துக் கொள்ளுதல், ஹார்மோன் பிரச்சனைகள் ஆகியவை காரணமாக இருக்கும். இதற்கு சந்தன பவுடர் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கி முகம் பளிச்சென ஆகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!