தோட்டக் கலை

தோட்டத்திற்கு பழக்கரைசல்

பழக்கரைசல் தயாரிக்கும் முறை:

தேவையானவை:

நன்கு கனிந்த வாழைப்பழம், பப்பாளி, பரங்கிக்காய் – தலா அரைக்கிலோ.

பொடித்த வெல்லம் – ஒரு கிலோ

செய்முறை: பழங்களைத் தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கி வெல்லத்துடன் சேர்த்து, கைகளால் பிசைந்து கூழாக்கவும். இத்துடன் ரெண்டரை லிட்டர் தண்ணீர் கலந்து, 21 நாள்கள் காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி மூடிவைக்கவும். 21 நாள்களுக்குப் பிறகு, கலவையின்மீது வெள்ளை நிற ஏடு படிந்திருக்கும். இந்தப் பக்குவத்தில் பெரிய துளைகள் கொண்ட வடிகட்டியில் பழக்கரைசலை வடிகட்டி, தண்ணீரை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.




மாடியில் ஒரு குட்டி தோட்டம் அமைப்போம், விதைப்போம் நம் பாரம்பரிய விதைகளை | Facebook

20 மில்லி பழக்கரைசலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளின் மேல் தெளித்துவிட, செடிகள் வெயில் நேரத்திலும் செழித்து வளரும். தோட்டம் அமைக்க திட்டமிடுகிறீர்கள் எனில் காய்கறி, கீரை, பழங்கள், பூச்செடி எனக் கலந்து தோட்டம் அமைத்தால் எல்லாப் பயன்களும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு, திட்டமிட்டு தோட்டம் அமையுங்கள் ஆரோக்கியமான வாழ்வு நிஜமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!