தோட்டக் கலை

துளசி செடி

என்னடா துளசிய எப்போ சமையலுக்கு பயன்படுத்துனாங்கனு யோசிக்கிறீங்களா? இந்த கேள்வி மனதில் எழுவது சரிதான். காலம் காலமாக நம் முன்னோர்கள் துளசியை வீட்டில் நட்டு, காலையில் அதை தொழுது, வலம் வந்து வாழ்ந்து மறைந்தனர். அவர்களுடன் இந்த பழக்கமும் மடிந்து விட்டது.

துளசியை சமையலில் சேர்க்க முடியாது தான்; ஆனால், துளசியின் மருத்துவ குணங்கள். பயன்கள் ஏராளம் – இது அனைவரும் அறிந்ததே!

துளசி செடி வீட்டில் இருப்பது மிகவும் நல்லது, வீட்டின் சூழலை சாந்தமாக வைத்திருக்க உதவும். இப்படிப்பட்ட துளசியை வீட்டில் எப்படி வளர்ப்பது என்று பார்த்தறியலாம் வாருங்கள்!




வளர்க்கும் முறை!

  • துளசி செடிகள் விதைகள் மூலமாக வளரக்கூடியவை. ஒரு ஆழமான, வளமான மண் கொண்ட ஜாடியில், 2 அங்குல ஆழத்தில் இவ்விதைகளை புதைக்கவும். கதிரவனின் ஒளி படும்படி இந்த ஜாடியை வைக்கவும்.

  • கோடை காலத்தில் செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்றவும் மற்றும் குளிர் காலத்தில், வாரம் 2-3 முறை நீர் ஊற்றினால் போதுமானது. 20 டிகிரி வெப்பநிலையில், துளசி விதைகள் 2 வாரத்தில் வளர்ந்துவிடும்.

  • மாதம் ஒருமுறை செடிக்கு உரம் வைக்கவும். இலைகள் பெரிதானதும், அவற்றை பறித்து பயன்படுத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!