Entertainment lifestyles News

சுகுணா ஃபுட்ஸ்: இந்திய முழுவதும் விரிவாக்கம்.. வியக்கவைக்கும் கதை..!!

பெரிய கனவைக் காண உங்களுக்கு தைரியம் இருந்தால் வெற்றி என்பது எந்த வழியிலும் எந்த தொழில் மூலமும் அடையக்கூடிய ஒரு விஷயமாகும். அப்படி சாதித்தவர்கள் தான் சௌந்தரராஜன் சுந்தரராஜன் சகோதரர்கள்.

இந்தியாவின் பணக்கார கோழிப்பண்ணையின் அதிபர்கள் தான் சௌந்தரராஜன் சுந்தரராஜன் சகோதரர்கள். ரூ.5000 முதலீட்டில் 1984 ஆம் ஆண்டில் சிறிய அளவில் கோழிப்பண்ணையை இந்த சகோதரர்கள் தொடங்கினர்.




Suguna Foods: Meet The Rs 9,000 Crore Poultry Goliath From Tamil Nadu - Forbes India

கோயம்புத்தூரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டையில் இந்தப் பண்ணையை வைத்தனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பண்ணைத் தொழில் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோழிப்பண்ணையாகி ரூ.12,000 கோடியை ஈட்டித் தந்துள்ளது.

சுகுணா ஃபுட்ஸ் என்ற அவர்களது கம்பெனி 40,000 விவசாயிகளுடன் 18 மாநிலங்களில் 15,000 கிராமங்களில் நடைபெறுகிறது. சௌந்தரராஜன் தான் சுகுணா புட்ஸின் தலைவர். அவரது மகன் விக்னேஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்துதான் சுகுணா புட்ஸின் அதிகபட்ச வருவாய் வருகிறது.




பிராய்லர் சிக்கன் மற்றும் முட்டை உற்பத்தியில் அவர்கள் தான் சந்தையின் முன்னோடியாக இருக்கின்றனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் சௌந்தரராஜன் காய்கறிகளை விளைவித்து விற்றார். அதில் பெரிய லாபத்தை சம்பாதிக்க முடியாததால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அக்ரிகல்சுரல் பம்ப் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

பின்னர் அவர் தனது சகோதரரின் தொழிலைக் கவனிக்கத் திரும்பி வந்தார். அவர்களது வியாபாரம் முதலில் வியாபாரிகளுக்கு கோழியை விற்பதில் தொடங்கியது. விவசாயிகளிடமிருந்து கோழி வளர்ப்பு பற்றிய நடைமுறைகளை அவர்கள் கற்றுக் கொண்டனர். பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வியாபாரிகளை வைத்து பண்ணைத் தொழிலை ஆரம்பித்தனர்.

1990 ஆம் ஆண்டில் மூன்று விவசாயிகளை வைத்து இந்தத் தொழிலைத் தொடங்கினர். கோழிகளை வளர்ப்பதற்குத் தேவையான பொருட்களை அவர்கள் விவசாயிகளுக்கு தந்தனர். கோழியை வளர்த்து அதை இவர்களிடம் விவசாயிகள் விற்று பணத்தை வாங்கிக் கொண்டனர்.

Suguna Poultry Farm Ltd | Coimbatore

அடுத்த 7 ஆண்டுகளில் அவர்களிடம் 40 விவசாயிகள் இணைந்தனர். அதன் மூலம் அவர்களது வருவாய் ஆண்டுக்கு ரூ.7 கோடியை எட்டியது. விரைவிலேயே தமிழ்நாட்டில் சுகுணா சிக்கன் மிகவும் பிரபலமடைந்தது. சுகுணா சிக்கன் நிறுவனம் பின்னர் இந்த விவசாயிகளுக்கு கோழிகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கத் தொடங்கியது.




விவசாயிகளிடம் மோசமான செயல்திறன் ஏற்பட்டால் நிறுவனம் குறைந்தபட்ச வளர்ச்சிக் கட்டணத்தையும் செலுத்துகிறது. விவசாய வணிகம் அவர்களின் வணிகத்தில் 80 சதவீதத்துக்கும் மேலாக பங்களிக்கிறது. இந்த பொருட்கள் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்கும் சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன. இந்நிறுவனம் கால்நடை தீவனங்களையும் உற்பத்தி செய்கிறது.

வணிகப் பின்னணியோ கல்வியோ இல்லாத போதிலும் அவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முடிந்தது. 2021 நிதியாண்டில், அவர்களின் விற்றுமுதல் ரூ.9,155.04 கோடியாக இருந்தது. 2020ல் ரூ.8739 கோடி , விற்றுமுதல், 2021 நிதியாண்டில்,ரூ.358.89 கோடி லாபம் ஈட்டிய இந்நிறுவனம், கடந்த ஆண்டு 12,000 கோடி வருவாயை சம்பாதித்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!