gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கொம்பு மாட சுவாமி.!!

கூப்பிட்டால் துணை வருவார் கொம்பு மாட சுவாமி.!!

சீவலப்பேரி, நெல்லை மாவட்டம்

மறுகால்தலை ஊரில் உள்ள ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் நிலையம் கொண்டுள்ள கொம்பு மாடசுவாமி கூப்பிட்டால் துணை வருவார். துயரங்களை தீர்த்து வைப்பார்.

Kombumadaswamy - அருள்மிகு கொம்பு மாடசாமி கோவில்... | Facebook

 காவல் தெய்வமாக முதன்மை பெற்று திகழ்பவர் கொம்பு மாடசாமி. இக்கோயிலில் வீற்றிருக்கும் சுடலைமாடன் மீது பக்தி கொண்ட இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்துக்காரர் கூலிப் பணமும், தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காய்கள் கொஞ்சம் கொடுத்து அனுப்பினார். தலையில் காய்ஞ்ச விறகும் முந்தானையில் கத்தரிக்காய்களையும் முடிந்துகொண்டு வீட்டுக்கு நடந்து வருகிறாள்.

வழியில் எதிரே வந்த அப்பகுதியிலே பெரிய தோட்டப் பண்ணைக்காரர், அந்த பெண்ணின் முந்தானைப்பகுதி பெரிதாக இருப்பதை பார்த்துவிட்டு, ‘‘என்னம்மா ஆளு கொஞ்சம் அசந்தா தோட்டத்தையே இல்லாம ஆக்கிருவீங்களா’’ என்று சத்தம் போட்டார். அதற்கு அந்த பெண், ‘‘ஐயா, இது நான் வேலைப்பார்த்த தோட்டத்தில உள்ளது. பண்ணையாருதான் எனக்கு கூலிய கொடுக்கும் போது கொடுத்து அனுப்பினாரு’’ என்றாள். அதை கேட்க மறுத்த அவர். இல்லை, இல்லை இது என் தோட்டத்து காய்கள் தான். என்கிட்ட பொய்யா சொல்லுத என்று பேசினார்.

கண்களில் கண்ணீர் மல்க, அந்த பெண் கூறினாள். ‘‘ஐயா, நான் கும்பிடுற பூலுடையார் கோட்டையில் காவல் காக்கிற அந்த சுடலைமாடன் சாமி மேல சத்தியமா சொல்லுதேன். உங்க தோட்டத்திலிருந்து நான் கத்தரிக்காய களவாங்கல’’ என்று அதற்கு அந்த தோட்டத்துக்காரர் ‘‘உங்க சாமிய கொண்டு சத்தியம் பண்ணினா உட்டுருவினா,’’ அப்போது அந்த பெண் ‘‘எங்க சாமி தப்பு பண்ணினா யாரையும் தண்டிக்கிறவரு, அவர மிஞ்சுன நியாயவான் யாருமில்ல.’’ அப்போது குறுக்கிட்ட தோட்டக்காரர் ‘‘உங்க சாமிக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு’’ என்று கேட்டார். அந்த பெண், ‘‘ஐயா, இன்னத்த பொழுது முடிஞ்சு நாளைக்கு காலையில வந்து சொல்லுங்க நான் உங்க தோட்டத்தில திருடுனேன்னு. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க, என் சாமி உங்களுக்கு நான் திருடலங்கிறதுக்கு அறிகுறி காட்டுவாரு, அப்புறும் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் என்றாள். ஊரு கூட்டத்தில சொல்லி அவமானப்படுத்தினாலும் ஏத்துக்கிறேன்.’’ என்றாள். ‘‘சரி, போ, நாளை விடியட்டும்’’ என்று மிரட்டும் தோணியில் பேசினார்.




மறுநாள் காலை எழுந்து தோட்டத்துக்காரர் தோட்டத்துக்கு சென்றார். அங்கே செடியில் முளைத்திருந்த அத்தனை கத்திரிக்காய்களிலும் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. அதனை கண்டு திடுக்கிட்டவர் ஓடோடி வந்து அந்த பெண்ணிடம் ‘‘உண்மை தெரியாம உன்னை சந்தேக பட்டுட்டேன் தாயி, என்னை மன்னிச்சிடு ஆத்தா’’ என்று கூற, அந்த பெண், ‘‘என் சுடல மாடசாமி … ’’என்று மெய் உருகி கத்திய படி, அந்த பெண், தோட்டத்துக்காரர், ஊர்க்காரர்கள் என எல்லோரும் பூலுடையார் சாஸ்தா கோயிலுக்கு வர, அங்கே சுடலைமாடசுவாமி பீடத்தின் தலையில் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. தோட்டத்துக்காரர் சாமியின் முன்பு மண்டியிட்டு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அன்றிலிருந்து இக்கோயில் சுடலைமாடசாமி, கொம்பு மாடசாமி என்று அழைக்கப்படலானார்.

இக்கோயில் நெல்லை சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து

லிருந்து புளியம்பட்டி, தவளாப்பேரி பேருந்துகளில் சென்றால் சீவலப்பேரியை அடுத்த ஊர் மறுகால்தலை. இங்கு தான் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் கொம்பு மாட சுவாமி வீற்றிருக்கிறார். இப்பகுதியில் உள்ளவர்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு கொம்பையா, கொம்பையா பாண்டியன், கொம்பையா தாஸ் இவ்வாறு பெயர்கள் சூட்டுகின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!