gowri panchangam Sprituality Uncategorized

காவல் தெய்வங்கள்/காத்தவராயன் கதை

காத்தவராயன் கதையின் கூறுகள் வெவ்வேறு வழிகளில் கூறப்படுவதுண்டு. சாதாரண குடும்பத்தில் பிறந்த காத்தவராயன் அப்பகுதி அரசன் மகள் ஒருத்தியைக் காதலித்து மணம் செய்து கொண்டான். அரசமகளை திருமணம் செய்த குற்றத்தினால், மன்னனது சினத்திற்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மன்னனிடம் தனது காதலுக்காக “மக்களால் வணங்கப்படும் தேவரும் தெய்வங்களும் இவ்வாறே பெண்களைக் காதலித்து மணம் செய்துகொண்டுள்ளார்கள்” என்று காத்தவராயன் வாதிடுகிறான்.

ஆனாலும் அவன் வாதத்தை ஏற்று கொள்ளாமல் கழுயேற்றி சாகடிக்க ஆணை இடபட்டது ஆனால் கழுவேறிய சில நேரத்தில் தான் முற்பிறவியால் உயிர்த்தெழுந்து தெய்வமாக வணங்கபட்டு வருகிறார்.




உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை - #பங்குனி_உத்திரம் திருநாளில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை பதிவிடுங்கள்.! பூர்வீக ஊரில் ...

காத்தவராயன் கதை அல்லது தமிழகத்தில் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம்-திருச்சியைச் சுற்றி உள்ள ஊர்களில் வழங்கும் ஒரு கதையும், கதையை தழுவிய கூத்தும் ஆகும். இது அடிப்படையில் சாதி அமைப்பு முறையை மீறிய ஒரு திருமணக் கதை ஆகும். ஆனால் இது சாதி அமைப்பை நிலைநாட்டும் வழியிலும் கூறப்படுவதுண்டு.

காத்தவராயன் காதலித்து உயிர்துறக்க காரணமாய் இருந்த பெண்ணின் பெயர் ஆரியமாலா, இப்பொதும் கூட காதலுக்கு காத்தவராயன்-ஆரியமாலா காதல் உவமையாக சொல்லபடுவது வழக்கத்தில் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!