gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (24.02.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.51 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று இரவு 11.05 வரை மகம். பின்பு பூரம். பூராடம் உத்தராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனையை சந்திப்பீர்கள். காதலியால் மன நிம்மதியை இழப்பீர்கள். எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் பார்ப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சிறிதளவு ஆதாயம் அடைவீர்கள். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். மனையிடம் வாங்குவீர்கள். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் இல்லத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவீர்கள்.முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.




மிதுன ராசி அன்பர்களே!

ஏற்றமாக இருந்த வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகளுக்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சலில் அவதிப்படுவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். சகோதர வகையில் பண உதவி செய்வீர்கள். நடக்கும் தொழிலை புதிய முயற்சிகளால் விரிவுபடுத்துவீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடக ராசி அன்பர்களே!

பிரிந்து போன குடும்பங்களை ஒன்று சேர்ப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி திறனால் சந்தோசம் அடைவீர்கள். வீடு பூமி மனை போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்திற்காக பொருத்தமான இடத்திற்கு மாறுவீர்கள்.தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.




சிம்ம ராசி அன்பர்களே!

பொல்லாங்கு பேசுபவர்களால் மனப் பாதிப்படைவீர்கள். தொழில் துறைகளில் நிதானம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்தை இழக்காதீர்கள். ஒப்பந்த வேலைக்கான பணத்தைப் பெற சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்காதீர்கள். அதனால் சில சிக்கல்களைச் சந்திப்பீர்கள்.அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை சந்தோசமாக பேசி சரி செய்வீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு குறைவதை உணர்வீர்கள். போட்டி பந்தயங்களில் நஷ்டம் அடைவீர்கள். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். காதலியை கஷ்டப்படுத்தாதீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.




துலா ராசி அன்பர்களே!

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை கொள்ளை அடிப்பீர்கள். பைனான்ஸ், அடகுக்கடை, ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கடினமான நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பை மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்வீர்கள். மார்க்கெட்டிங் தொழிலில் அலைச்சலால் உடல் சோர்வு அடைவீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார் துறை, அரசு ஊழியர்கள் வருமானத்தை அதிகரிப்பீர்கள். பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.




தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவற்றால் பாதிப்பு அடைவீர்கள். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகளை சந்திப்பீர்கள். சுயதொழிலில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.வேலையாட்களின் உதவியால் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள்.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். வருமானத்திற்காக இடம் மாறி செல்வீர்கள். அனுசரித்து நடந்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள். பயணங்களில் அதிக எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.




கும்பராசி அன்பர்களே!

சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நடத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் உடல் கோளாறுகளை சரிப்படுத்துவீர்கள். அரசுப் வேலையில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவீர்கள். விபத்தில் சிறிய காயமடைவீர்கள். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அகற்றுவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். ஒர்க் ஷாப், எலக்ட்ரீசியன், கொத்தனாருக்கு தொடர்ந்து வேலை கிடைத்து புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள்.
மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!