gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (22.2.24)

சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி, இன்று மாலை 06.26 வரை பூசம். பின்பு ஆயில்யம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்வீர்கள். கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலுக்கு தேவையான நன்மையை பெறுவீர்கள். பணப்பற்றாக்குறையை களைவீர்கள்.சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நிம்மதி பெறுவீர்கள். தூரதேசப் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை ஒழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவீர்கள்.
முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.




மிதுன ராசி அன்பர்களே!

எல்லாவிதமான குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பீர்கள். ரத்த அழுத்தத்தை குறைக்க இயற்கை உணவுகளை உட்கொள்வீர்கள். நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

தொழிலில் அதிகமான முதலீடு செய்யாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். போட்டிகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகளை தாமதமாக பெறுவீர்கள். புரியாமல் பேசி காதலியின் அன்பை இழப்பீர்கள்.விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.




சிம்ம ராசி அன்பர்களே!

குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். வேலையிடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையால் பற்றாக்குறை ஏற்பட்டு தடுமாற்றம் அடைவீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீசியன்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை பெறுவீர்கள் . வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். பிள்ளைகள் கல்வித் திறனால் பெருமை அடைவீர்கள்.அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன நிம்மதி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.




துலா ராசி அன்பர்களே!

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகளை களைவீர்கள். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். கடல்கடந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். காதலிக்காக தங்க நகை வாங்கி கொடுப்பீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு செல்வீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண் டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்

விருச்சிக ராசி அன்பர்களே!

நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள் . உறவினர் மத்தியில் மரியாதையை அதிகரிப்பீர்கள்.ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.




தனுசு ராசி அன்பர்களே!

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீர்கள். அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திப்பீர்கள். பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள். வங்கி வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள். கணக்கு வழக்குகளை கவனமாக எழுதி வைக்க தவறாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் வீண் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு கிடைக்கக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனையை விலக்குவீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிக நன்மை அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் கணிசமான பணம் சேர்ப்பீர்கள். ஒர்க்ஷாப்பில் நல்ல வருமானம் பார்ப்பீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




கும்பராசி அன்பர்களே!

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். மின்சாரப் பொருட்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.கால பைரவரை வழிபடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனராசி அன்பர்களே!

சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிக நன்மையை அடைவீர்கள். முக்கியமான கடனை அடைக்கப் போராடுவீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!