gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (21.02.24)

சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.58 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று மாலை 04.37 வரை புனர்பூசம். பின்பு பூசம். அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை பார்க்கலாம்

மேஷ ராசி அன்பர்களே!

பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். சக தொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் அடைவீர்கள். மாமனார் வீட்டில் இருந்த மனத்தாங்கலை புத்திசாலித்தனத்தால் அகற்றுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் முன்னேற்றம் காண்பீர்கள்.இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் திட்டம் தீட்டுவார்கள். சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்காமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிலம் விற்பனையில் லாபம் அடைவீர்கள்.இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு  மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகையை சம்பாதிப்பீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேளுங்கள். அரசாங்கப் பைல்களில் கையெழுத்துப் போடும் போது கவனத்தை சிதற விடாதீர்கள். வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் சிரமத்தை காண்பீர்கள்.இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மந்தநிலையால் சங்கட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

கடினமாக வேலை பார்த்து மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பெட்டிக் கடை வியாபாரிகள் ஓரளவு லாபம் பார்ப்பீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் கை பணத்தை இழந்து கஷ்டப்படுவீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் மனம் கோணாமல் நடப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள்.ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

வியாபாரத்தில் புதுமையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலுக்காக தேவைப்பட்ட பணத்தை சேர்ப்பீர்கள். கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்துவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டை கலகலப்பாக மாற்றி அனைவரையும் அசத்துவீர்கள்.இன்று கால பைரவரை  வழிபட  நலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள். தந்தையார் மூலம் பணவரவு பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் எண்ணத்திற்கு விதை போடுவீர்கள். கடன் பிரச்சினைகள் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்து நிம்மதி அடைவீர்கள்.இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் போடுவதை நிறுத்தி வையுங்கள். வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தியை தாமதமாக பெறுவீர்கள். கடன் பிரச்சனையால் தலை குனிவு அடைவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை. முருகப்பெருமானை  வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

 

துவண்டு கிடந்த தொழிலை தூக்கி நிறுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலையை செய்வீர்கள். சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவீர்கள். முக்கிய கடனை அடைப்பீர்கள். இரும்புத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். காதலியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால்  மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

மூச்சுவிட முடியாத அளவுக்கு ஏற்பட்ட வேலைப்பளுவால் தலைசுற்றிப் போவீர்கள். கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்பை கடைப்பிடிக்க தவறாதீர்கள். ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

பூர்வீகச் சொத்துக்களை விற்பதில் தடையை எதிர்நோக்குவீர்கள். குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு சந்தோசப்படுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்குவீர்கள். பணி இடத்தில் சலிப்பின்றி வேலை பார்த்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.இன்று அம்பிகையை  வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவை அதிகரிப்பீர்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஏற்றமான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்
இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!