gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (18.02.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.10 வரை நவமி. பின்னர் தசமி, இன்று பிற்பகல் 01.57 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிடம். சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை பார்க்கலாம்

மேஷ ராசி அன்பர்களே!

பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி வெற்றியை பெறுவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கவர்வீர்கள். வித்தியாசமான முயற்சியில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். தந்தையார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சியில் இறங்கினால் தோல்வியை சந்திப்பீர்கள். வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள மறக்காதீர்கள். வீட்டிலும் வெளியிலும் அவமரியாதை அடைவீர்கள். . காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு  மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

உறவினர்கள் சண்டையால் உறக்கத்தை தொலைப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்படும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பெண்களின் அன்பை பெரும் முயற்சியில் தோல்வியடைவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் பெரிய அனுகூலம் பெற மாட்டீர்கள்.இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

வர்த்தகத் துறையில் சிக்சர் அடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிகம் லாபம் பார்ப்பீர்கள். மைத்துனருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வேலை திறனை வெளிப்படுத்தி மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் உங்களின் செல்வாக்கை உயர்த்தி பிடிப்பீர்கள். தாராளமாக பண வரவு வந்து கையில் காசு பார்ப்பீர்கள். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அந்நிய நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். கஷ்டமே இல்லாமல் கன்னிப் பெண்களின் மனதை கொள்ளை அடிப்பீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து திடீர் அழைப்பு வரும். உங்களின் மன காயங்களுக்கு மனைவி மருந்தாக இருப்பார். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

வெட்டி செலவு செய்யாதீர்கள். அவசர தேவைக்காக நகைகளை அடகு வைப்பீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இல்லாவிட்டால் கை கால்களில் ரத்தக்காயம் அடைவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் சந்திராஷ்டம நாள். சங்கடத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

திருமண பேச்சு முடிவடைந்து கல்யாண வேலைகளை ஆரம்பிப்பீர்கள். அவசியமான நேரத்தில் அன்பு செலுத்தும் பெண்கள் பண உதவியை பெறுவீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை பக்குவமாக அடைப்பீர்கள். கண்ணால் பேசி மனம் கவர்ந்த காதலியை வசப்படுத்துவீர்கள். முருகப்பெருமானை  வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

 

எதிரிகளின் தொல்லைகளால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க தடுமாறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அவஸ்தையை சந்திப்பீர்கள். பெண்கள் புரிந்து கொள்ளாமல் உருவாக்கும் பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். திடீரென்று வயிற்று கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். அந்நிய பெண்களிடம் விலகியே இருங்கள். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால்  மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

இரும்பாக இருக்கும் பெண்ணின் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட  இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். மனைவி மக்கள் உறுதுணையால் சற்று ஆறுதல் அடைவீர்கள். உரிய நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.இன்று அம்பிகையை  வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!