gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (19.02.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று பிற்பகல் 02.21 வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை.சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள். வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.இன்று அம்பிகையை தரிசிக்க நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.




ரிஷப ராசி அன்பர்களே!

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள்குத்து வேலையால் பாதிக்கப்படுவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பால் மன நிம்மதி அடைவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து குடும்ப வண்டியை சீராக செலுத்துவீர்கள்.
முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். நுரையீரல் பிரச்சனையை சரி செய்ய மருத்துவரிடம் செல்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இல்லாமல் தவிப்பீர்கள்.அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.




கடக ராசி அன்பர்களே!

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களளில் நன்மையை பெறுவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானத்தை கொண்டு வருவீர்கள். தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிரிகளின் ஆசையை தவிடு பொடி ஆக்குவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள் . பெற்றோர்களின் ஆசியால் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமும் மன நிம்மதியும் அடைவீர்கள். விநாயகர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.




கன்னி ராசி அன்பர்களே!

வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளின் கனவை கலைப்பீர்கள். எடுத்த காரியத்தில் தாமதமேற்பட்டு சங்கடப்படுவீர்கள் . இனம் தெரியாத கவலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். முதலாளிகளின் அன்பைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள மறக்காதீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்அலைச்சலுடன் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.

துலா ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள். பொருளாதாரம் மந்த நிலையால் மன வேதனைப்படுவீர்கள். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது படித்துப் பார்க்க தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.




விருச்சிக ராசி அன்பர்களே!

உறவினர்கள் நண்பர்களின் உதவியை உரிய நேரத்தில் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அலைச்சலையும் வேலைப்பளுவையும் கணிசமாக குறைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை பெற அரசாங்கத்தில் இருந்த தடைகளை சாமர்த்தியமாக விலக்குவீர்கள்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு ராசி அன்பர்களே!

உறவுக்குள் இருந்த சிக்கலை தீர்த்து சமரச நிலைக்கு கொண்டு வருவீர்கள். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல் நீங்கி நெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தில் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.




மகர ராசி அன்பர்களே!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கோபத்தைத் தூண்டுவதால் டென்ஷன் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து எறிவீர்கள். வியாபாரப் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை நடத்துவீர்கள். பைனான்சில் நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானப்படுவீர்கள்.பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவியை தகுந்த சமயத்தில் பெறுவீர்கள். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.இன்று வீரபத்திரரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.




மீனராசி அன்பர்களே!

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்ப்புகள் தாமாகவே விலகும்படி செய்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்பட்டு வெளியூர் செல்வீர்கள்.விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!