Entertainment lifestyles News

இந்திய சில்லறை வியாபாரத்தில் கொழிக்கும் கேரள தொழிலதிபர்.. யார் இவர்..?

உலகளவில் நிறைய இந்தியர்கள் இப்போது பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்ற பெரிய பிஸினஸ் மேக்னெட்கள் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராகத் திகழ்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் பிறந்து ஐக்கிய அரபு அமிரீகத்தில் வெற்றி கொடி நாட்டி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் யூசுப்.

MA Yusuf Ali India's Second Richest businessman: Daily income is Rs 180 crore - News Next Live

கேரளாவைச் சேர்ந்த எம்ஏ யூசுப் அலி இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர். கல்வியில் சிறப்புற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர். போர்ப்ஸ் 2022ஆம் ஆண்டு பட்டியலின்படி இந்தியாவின் பணக்காரர்களில் 35ஆவது இடத்தில் யூசுப் இருக்கிறார்.




இந்திய சில்லறை வியாபாரத்தில் கொழிக்கும் யூசுப் என்ற யூசுப் அலி முசாலியம் வீட்டில் அப்துல் காதர் (இது தான் இவருடைய முழு பெயர்)கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்தவர். லூலு குருப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

லூலூ குரூப் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா, அமெரிக்கா உள்பட 23 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதில் 65,000 பேர் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 8 பில்லியன் அதாவது 66,000 கோடி வருவாயை எட்டி வருகிறது.

போர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் லூலூ குருப் தலைவர் யூசுப் கேரளத்தின் முதல் இடத்திலும் இந்திய அளவில் 35ஆவது இடத்திலும் இருக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.43,612.56 கோடியாகும். யூசுப்பின் தற்போதைய நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர் ஆகும்.

இந்திய மதிப்பில் 59,118,15,00,000 ரூபாய். யூசுப் பிஸினஸ் மேனேஜ்மென்டில் டிப்ளமோ படித்திருக்கிறார். 1973இல் யூசுப் அபுதாவிக்கு சென்று அவரது மாமாவுடன் சேர்ந்து சிறியதொரு டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தை நடத்தினார். 1990இல் முதல் லூலூ சூப்பர் ஸ்டோரை தொடங்கினார். லூலூ கம்பெனி அபுதாபியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது.




நன்கு பிரபலமான ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் ஹைப்பர் மார்கெட்டுகளின் நெட்வொர்க் அபுதாபியில் உள்ள பல இனக் குடிமக்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.அவரது பரபரப்பான வணிகத்துடன் கூடுதலாக, யூசுப் அலி பல அமைப்புகளுடன் ஈடுபட்டுள்ளார். சமூகத்தில் சமமாக ஈடுபட்டுள்ளார்.

இவரது மனைவி ஷபீரா யூசுப் அலி. தம்பதிக்கு மூன்று குழந்தைகள். அவரது மூத்த மகள் சபீனாவை ஹெல்த்கேர் தொழிலதிபரும் பலகோடி அதிபருமான ஷம்ஷீர் வயலில் திருமணம் செய்து கொண்டார். லூலூ நிறுவனம் இப்போது இந்தியா முழுவதும் கடை விரித்துள்ளது. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கேரளாவில் பல கிளைகளை அமைத்து மக்களிடையே பெருத்த ஆதரவைப் பெற்று வருகிறது. ஸ்டார் ஹைப்பர் மார்க்கெட்டை வியாபாரப் போட்டியில் இருந்து வீழ்த்தி முன்னேறி வருகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!