Cinema Entertainment

2023 ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்ற இயக்குனர் யார்?சன் டிவி டிஆர்பி-யின் கிங்

பொதுவாக கலைஞர்களுக்கு மிகப்பெரிய விருது, அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பொருத்தே அமையும். அந்த வகையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் ஆர்டிஸ்ட்டுகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்றது எந்த நாடகம் என்பதை பார்க்கலாம்.

மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது.

பொதுவாகவே நாடகம் என்றால் அனைவரது மனதிலும் முதல் இடத்தை பிடித்து சிம்ம சொப்பனமாக இருப்பது சன் டிவி தான். அந்த வகையில் நம் தாத்தா பாட்டி இருக்கும் காலத்தில் இருந்து இப்பொழுது வரை மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. அதனாலயே இந்த சேனலில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டிஆர்பி யில் கிங்காக கடந்த இரண்டு வருடமாக முதலிடத்தை பிடித்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.




அதற்கு என்னதான் கதை மிகப்பெரிய காரணமாக இருந்தாலும், அதை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு அதில் நடிக்கும் கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்புதான். அத்துடன் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய தூணாக அமைந்தது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. இவருடைய இறப்பிற்கு பின் தட்டு தடுமாறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் தற்போது ஓரளவுக்கு மறுபடியும் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியல் தற்போது வரை அனைவரது ஃபேவரிட் நாடகமாகவும், சிறந்த கதை என்கிற முறையில் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அதனால் கடந்த ஆண்டு சிறந்த சீரியல்காண விருதை எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் பெற்றிருக்கிறார். அத்துடன் மொத்த டீமும் அந்த விழாவில் கலந்துகொண்டு அவர்களுடைய சந்தோசங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதாவது மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் படி சிறந்த தொடராக எதிர்நீச்சல் சீரியல் தேர்வாகியுள்ளது. இதற்கான விருதை பெற்ற இயக்குனர் திருச்செல்வம் அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்து அவர் வாங்கிய விருதை மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் .

அத்துடன் எதிர்நீச்சல் சீரியல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்ததற்கு முக்கிய காரணம் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். இந்த வெற்றிகள் அனைத்தும் அவருடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லி அவருடைய சார்பாக இந்த விருதை நான் பெற்றிருக்கிறேன் எனக் கூறி மொத்த டீமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!