gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 94 | தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள்

108  திவ்ய தேசங்களில், தொகைவிலிமங்கலம் இரட்டைத் திருப்பதிகளான ஸ்ரீநிவாஸர், அரவிந்தலோசனர் கோயில்கள், 94-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகின்றன. தொகைவிலிமங்கலம் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் நவதிருப்பதிகளில் 8-வது திருப்பதியாகவும், ராகுவுக்கான தலமாகவும் போற்றப்படுகிறது.

குப்த விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இத்தல பெருமாள் அருள்வார். தென் திருப்பேரை அருகே உள்ள இந்த தலம் இரட்டைத் திருப்பதிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. அடர்ந்த காட்டில் அமைந்துள்ள இக்கோயில் அருகில் அதிக வீடுகள் இல்லை.




தல வரலாறு 

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.




இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.

தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.

இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.

திருவிழாக்கள்: இரட்டைத் திருப்பதிகளில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!