gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 81 | திருக்கடித்தானம் அற்புத நாராயணன் கோயில்

 திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் திருக்கடிதானம் அற்புத நாராயணன் கோயில், 81-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கடி சென்ற சொல்லைக் கொண்டு மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அவை திருக்கடிகை என்றழைக்கப்படும் சோளிங்கபுரம், கண்டமென்னும் கடிநகர் மற்றூம் திருக்கடித்தானம் ஆகும்.

108 வைணவத் திருத்தலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா

தல வரலாறு: முன்பொரு காலத்தில் சூரிய வம்ச அரசர், ருக்மாந்தன் திருக்கொடித்தான பகுதியை ஆண்டு வந்தார். இவரது நந்தவனத்தில் பூக்கும் மலர்களை, தேவர்கள் பறித்து பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போவதை அறிந்த காவலர்கள் இதுகுறித்து அரசரிடம் தெரிவித்தனர். உடனே அரசன் அவர்களிடம், மலர்களைப் பறிப்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

மறுநாள் மலர்களைப் பறிக்க தேவர்கள் வந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மன்னர் முன் நிறுத்தப்பட்டபோது, உண்மையறிந்த அரசர் அவர்களிடம் மன்னிப்பு கோரி அவர்களை விடுவித்தார். இருப்பினும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள், தங்கள் வலிமையை இழந்து வானுலகம் செல்ல முடியாமல் போனது.




தேவர்கள் மீண்டும் வானுலகம் செல்ல என்ன வழி என்று மன்னர் அவர்களைக் கேட்டார். அதற்கு தேவர்கள், “நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால், நாங்கள் வானுலகம் செல்ல முடியும்” என்று பதிலளித்தனர். இதைக் கேட்டதும் மன்னர் தேவர்களை அழைத்துக் கொண்டு, இக்கோயிலுக்கு வந்து பெருமாள் முன்னிலையில் தனது ஏகாதசி விரத பலனை அவர்களுக்கு தானமாக அளித்தார்.

இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு கடிகை நேரத்துக்குள் நடைபெற்றதால், இத்தலத்துக்கு ‘திருக்கடித்தானம்’ என்ற பெயர் கிட்டியது.

கோயில் அமைப்பும் சிறப்பும்: புண்யகோடி விமானத்தின் கீழ் உள்ள வட்ட வடிவ கருவறையில் மூலவர் அற்புத நாராயணன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் அருகே நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

கருவறையின் தெற்குப்பகுதியில் தட்சிணாமூர்த்தியும் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இருவர் சந்நிதியில் கதவுகள் கிடையாது. சிறிய ஜன்னல் மூலமாகத்தான் இவர்களை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

திருவிழாக்கள்: கோகுலாஷ்டமி, கார்த்திகை தீபத் திருவிழா (10 நாள்), வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!