Entertainment lifestyles News

விமானத்தில் தப்பிவந்த சகோதரர்கள்.. 2வது இன்னிங்க்ஸ்-ல் உருவான India Gate..!!

லியால்பூர் தற்போது பாகிஸ்தானின் பைஸ்லாபாத்-ல் (Faisalabad) குஷி ராம், பிஹாரி லால் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தனர். இருவரும் சேர்ந்து அப்போதையை பஞ்சாபில் விவசாயிகளிடம் பருத்தியை வாங்கிச் சென்று மும்பையில் உள்ள பருத்து மில்களுக்கு விற்று வந்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வியாபரம் பெருகி அவர்களே சொந்தமாக பருத்தி மில்களையும் சில ஜவுளி மில்களையும் தொடங்கினர். இதை தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பஞ்சாப் விவசாயிகளிடம் கோதுமையை வாங்கி அதை பிரிட்டிஷ் ஏஜென்சிகளிடம் விற்று வந்தனர்.




எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் 1947இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை லார்டு மவுண்ட்பேட்டன் அறிவித்தார். இதனால் குஷி ராம், பிஹாரி லால் சகோதரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிப் போனது.




குஷி ராம், பிஹாரி லால் குடும்பத்துடன் ஒரு டகோடா விமானத்தில் இந்தியாவுக்குத் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்து வந்தனர். அந்தக் காலத்தில் அந்த சார்ட்டு விமானம் ரூ.4000 கட்டணம் வசூலித்தது, அந்த அளவுக்கு குஷி ராம், பிஹாரி லால் பெரும் பணம் பலம் கொண்டு இருந்தனர்.

பாகிஸ்தான் மண்ணில் அந்த விமானம் புரப்பட்டு, பத்திரமாக சப்தர்ஜங் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக அவர்களது குடும்பத்துக்கு டெல்லியின் சாந்தினி சௌக்கின் அருகே உள்ள நயா பஜாரில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது. அங்கிருந்து சகோதரர்கள் இருவரும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து அரிசி மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை ஆரம்பித்தனர். அவர்களது கம்பெனி மெல்ல வளர்ந்தது, 1985 ஆம் ஆண்டில் அவர்களது முதல் ஆலையான கேஆர்பிஎல் மூலம் அரிசியை மட்டும் விற்று விற்க துவங்கினர்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் அந்த ஆலை அமைந்திருந்தது. அந்த காலத்திலேயே இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு பெறும் முதல் இந்திய அரசி கம்பெனியாக கேஆர்பிஎல் உருவெடுத்தது.

இன்றைக்கு கேஆர்பிஎல் நிறுனத்தின் நிர்வாக இயக்குநராக அனில் கே மிட்டல் இருக்கிறார். நாட்டின் டாப் அரிசி ஏற்றுமதி நிறுவனமாக கேஆர்பிஎல் மாறியது. இந்தியாவில் பிரபலமான இந்தியா கேட் பாஸ்மதி அரிசி உற்பத்தியாளராக கேஆர்பிஎல் விளங்குகிறது.

ஹுருண் மதிப்பின்படி அந்த கம்பெனியின் நிகர மதிப்பு 2022 ஆம் ஆண்டில் ரூ.9398 கோடி ஆகும். கேஆர்பிஎல் என்பது இந்தியா கேட் உணவுகளின் தாய் நிறுவனமாகும். இது உலகின் மிகப்பெரிய அரிசி ஆலை மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் ஆகும்.




ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையையும் ஒவ்வொரு தட்டில் உணவையும் கொண்டுவர ஒரு உந்துதலாக இந்தியா கேட் பாஸ்மதி அரசி விளங்குகிறது. கொரோனா தொற்றுநோய் காலத்தில், தாய்மார்களுக்காக ‘கிரேன்ஸ் ஆஃப் ஹோப்’ என்ற இந்தியா கேட் ஃபுட்ஸ் தொடங்கப்பட்டது. அரிசி விநியோகத்தைப் பெற்று நாடு முழுவதும் பல குடும்பங்கள் பயனடைந்தன.

கேஆர்பிஎல் ஆனது, பாலிவுட்டின் நன்கு அறியப்பட்ட பெயரான டிஸ்கா சோப்ராவுடன் இணைந்து, இந்தியாவில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு ஆதரவளிக்கும் #IndiaForMothers என்ற முயற்சியுடன் தொடங்கப்பட்டது.

மிச்செலின் ஸ்டார் செஃப் விகாஸ் கன்னாவின் முன்முயற்சியான #FeedIndia க்கு ஆதரவளிக்க #IndiaForMothers என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, தாய்மார்களுக்கு அதிகபட்சமாக அரிசி வழங்குவதை உறுதி செய்தனர்.

வாராணசி, பிருந்தாவனம், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்சம் 5000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தை கொண்டிருந்தனர். என்ஜிஓவின் விபா மற்றும் விதவைகளுக்கான குளோபல் ஃபண்ட்ஸ் ஆகியவை இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும், அதிகபட்ச தாய்மார்களைச் சென்றடையவும் உதவியது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!