Cinema Entertainment

விஜயகாந்த் நிராகரித்த கேரக்டரில் தைரியமாக நடித்து அசத்திய ராஜ்கிரண்… அதென்ன படம்னு தெரியுமா?

அப்துல் காதிர் என்ற முஸ்லிம் இளைஞர் தான் பின்னாளில் நஎகர் ராஜ்கிரண் ஆனார். இவரது குடும்பம் ராமநாதபுரத்தில் நிலம் வைத்திருந்தது. பெரிய மீன்பிடித் தொழிலையும் நடத்தி வந்தது. ராஜ்கிரண் ஒரு பெரிய சினிமா ரசிகர். எம்ஜிஆர் படங்கள் என்றால் மிகவும் ஆர்வமாகப் பார்த்து ரசிப்பார்.

பேச்சு துணைக்கு வந்த வடிவேலு ...

அவரது வீட்டுக்குப் பக்கத்திலேயே தியேட்டர்கள் இருந்தது. அந்தக் காலத்தில் 7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பழமையான படங்கள் தான் திரையிடப்பட்டன.

அதனால் டீன் ஏஜ் வயதில் ராஜ்;கிரண் எம்ஜிஆர் படங்களைப் பார்த்து வளர்ந்தார். பின்னர் அவர் ராமநாதபுரத்தில் விநியோகஸ்தர் ஆனார். சுமார் 30 தியேட்டர்களுக்கு படங்களை விநியோகம் செய்தார்.




 

1980களில் சுமார் 30 வயது ஆனபோது அவர் சென்னைக்கு வந்தார். அங்கு தனது அலுவலகத்தைத் திறந்தார். குறிப்பாக கிராமப்புற வகை திரைப்படங்களுக்கு நிதி அளிக்கத் தொடங்கினார்.

ராஜ்கிரண், காஜா, அலிபாய் மற்றும் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் 1980களின் மத்தியில் முஸ்லிம் நிதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குழுவாக மாறினார்கள்.

பின்னர் ராஜ்கிரண் தயாரிப்பாளர் ஆனார். அவர் தனது முதல் படத்தை ராமராஜனை வைத்துத் தயாரித்தார். அவரது 2 படங்களும் நல்ல லாபத்தைத் தந்தன. அவர் கரகாட்டக்காரன் படத்திற்கு விநியோகஸ்தருக்கான உரிமையை ஒன்றரை லட்சத்திற்குப் பெற்றார். அவருக்குக் கிடைத்த லாபமோ 12 லட்சம்.

ராஜ்கிரணின் நடிப்பு வாழ்க்கை ராமராஜனால் தான் தொடங்கியது என்றே சொல்லலாம். கஸ்தூரி ராஜாவின் திரைக்கதைக்கு ராஜ்கிரண் ஒப்புதல் கொடுத்தார். விஜயகாந்த் அந்தக் கேரக்டரில் நடிக்க மறுத்ததால் ராமராஜனை நடிக்க வைக்க முயற்சித்தார் ராஜ்கிரண்.




 

ராமராஜன் 1993 ஜூலையில் தான் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியும் என்றார். அதனால் கஸ்தூரி ராஜா ராஜ்கிரணையே நடிக்க வைத்தார். அதுதான் என்ராசாவின் மனசிலே படம். இந்தப் படத்தில் மீனா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். சி சென்டர்களில் இந்தப் படம் சக்கை போடு போட்டது. தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.

தொடர்வெற்றிகளை ருசித்த ராஜ்கிரண் இனி படங்களைத் தயாரிப்பதில்லை என்று முடிவு செய்தார். கைநிறைய சம்பாதித்தார். அவற்றை வணிகங்களில் முதலீடு செய்தார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ்த்திரை உலகில் அவர் சில வருடங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தார். நந்தா படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

வடிவேலு ராஜ்கிரண் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக சேர்ந்தார். ராஜ்கிரண் மூலமே திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் வைகைப்புயல் வடிவேலு.




 

What’s your Reaction?
+1
1
+1
6
+1
0
+1
0
+1
0
+1
2
+1
4
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!