Entertainment lifestyles News

யானைகளுக்கு சுருக்கம் சுருக்கமான தோல் இருப்பது ஏன்? – சுவாரஸ்ய தகவல்கள்!

யானைகள் என்றால் நம் எல்லாருக்குமே பிடிக்கும். பிரம்மாண்டமான, கருப்பான உருவம் சத்தமான பிளிரல், ஆடி அசைந்து நடக்கும் நடை, மிளிரும் கண்களில் சாதுவான பார்வை என மனிதர்களை வசியம் செய்யும் விலங்கு யானை.

காட்டுக்கு ராஜா என சிங்கம், புலியை சொன்னாலும் எந்த விலங்குக்கும் பயந்து நடுங்காத கம்பீரமான உயிரினமாக காட்டில் யானைகள் வலம் வரும்.

யானைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.




உலகிலேயே பெரிய நிலவாழ் உயிரினம் யானை தான் என நமக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க சவன்னா (புஷ்) யானைகள் தான் பெரியதாக இருக்குமாம்.

இந்த புஷ் யானைகளில் ஆண் யானை 3 மீட்டர் வரை உயரமாகவும் 6000 கிலோகிராம் எடைக் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த யானைகள் 60-70 வயது வரை வாழ்ந்தாலும் 35-40 வயதில் தான் தங்களது முழு உருவத்தை அடையுமாம். வளர்ந்த யானைகள் மட்டுமல்ல யானைக் குட்டிக்கூட பிறக்கும் போதே 120 கிலோ எடை கொண்டதாக இருக்குமாம்.




மொத்தம் 3 வகையான யானைகள் இருக்கின்றன. ஆப்ரிக்க சவன்னா யானை, ஆப்ரிக்க காட்டு யானை, ஆசிய யானை. இந்த யானைகளின் காதுகளை வைத்து இவற்றை அடையாளம் காண முடியும் என்கின்றனர்.

ஆப்ரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட பெரிய காதுகளைக் கொண்டிருக்கும். ஆப்ரிக்க யானைகளின் காதுகள் ஆப்ரிக்க கண்டத்தின் வடிவிலும் ஆசிய யானைகளின் காதுகள் இந்திய துணைகண்டத்தின் வடிவிலும் இருக்கும் என்கின்றனர்.

தும்பிக்கையை வைத்தும் யானைகளை அடையாளம் காட்ட முடியும். ஆப்ரிக்க யானைகளுக்கு தும்பிக்கையின் நுனியில் இரண்டு விரல்கள் இருக்கும். ஆனால் ஆசிய யானைகளுக்கு ஒரு விரல் தான் இருக்கும்.

யானையின் தும்பிக்கை அதிசயமான உறுப்பு ஆகும். தும்பிக்கையின் தண்டு தான் மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு.

ஒரு தும்பிக்கையில் 150,000 தசை அலகுகள் இருக்கின்றன. இதனால் தும்பிக்கையை பலவகையாக பயன்படுத்த முடிகிறது. மூக்கு, ஒரு கை, தகவல் தொடர்பு உறுப்பு என பல வேலைகளை தும்பிக்கை செய்கிறது.

தும்பிக்கை மிக முக்கியமாக தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க பயன்படுகிறது. தண்ணீரை தும்பிக்கை வழியாக குடிக்க முடியாது என்றாலும் தும்பிக்கையை வாட்டர் பாட்டில் போல பயன்படுத்தி தண்ணீரை அருந்துகின்றன. தும்பிக்கையின் கொள்ளளவு கிட்டத்தட்ட 8 லிட்டராம். அதே நேரம் நீச்சலடிக்கும் போது சுவாசிக்கவும் தும்பிக்கையைப் பயன்படுத்துகின்றன.

ஒரு யானைக்கு 2 வயது ஆகும் போது தந்தம் வளர ஆரம்பிக்கும். யானையின் வாழ்நாள் முழுவதுமே தந்தம் வளர்ந்துகொண்டிருக்கும்.

இந்த தந்தம் என்பது யானையில் நீளமாக வளர்ந்த வெட்டுப்பற்கள் ஆகும். தந்தங்கள் உணவுத் தேடலில் உதவுகின்றன. மரத்தை உடைக்க, பட்டையை உரிக்க, வேரைத் தோண்டி எடுக்க என பல வேலைகளை செய்ய தந்தத்தை யானைகள் பயன்படுத்துகின்றன.

ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே நீளமான தந்தம் உள்ளது. பெண் யானையின் சிறிய தந்தம் உதட்டைத் தாண்டி கூட வளராமல் இருக்கும்.

யானைத் தந்தம்




அத்துடன் யானையின் பாதுகாப்புக்காக சண்டையிடும் போதும் தந்தங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த அழகிய தந்தங்களே யானைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கொண்டுவந்தன.

யானை தந்தத்தால் ஆன பொருட்களை மனிதர்கள் அதிகமாக விரும்பியதன் விளைவாக யானைகள் பெருமளவில் வேட்டையாடப்படுவதை நாம் அறிவோம்.

யானைகளுக்கு மிகவும் தடிமனான தோல் இருக்கிறது. உடலின் பெரும்பாலான இடங்களில் தோல் 2.5 செ.மீ வரை தடிமனானதாக இருக்கும்.

யானைகளுக்கு தோலில் அதிக மடிப்புகளும் சுருக்கங்களும் இருப்பதைப் பார்த்திருப்போம். தட்டையான தோலை விட இந்த சுருக்கங்கள் மற்றும் மடிப்புகள் 10 மடங்கு அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். இதனால் யானைகள் குளிர்ச்சியாக இருக்க முடிகிறது.

யானைகளுக்கு உடல் முழுவதுமே முடியிருக்கும்.

யானைகள் பெண்களை விட சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவை. வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சேரு மற்றும் தூசியை மேலில் போட்டு குளிக்கின்றன.

யானை சேரற்றுக் குளியல்

வாழுமிடத்தின் தன்மை மற்றும் பருவகாலத்தைப் பொறுத்து யானைகள், புற்கள், இலைகள், புதர்கள், பழங்கள் மற்றும் வேர்கள் ஆகியவற்றை உணவாகக்கொள்ளும்.

வறண்ட நிலத்தில் வாழும் யானைகள் மரக்கிளைகள், புதர்கள், மரப்பட்டை ஆகியவற்றை உண்ணும். வேறு வழியும் கிடையாது. ஏனெனில் யானைகள் ஒரு நாளுக்கு 150 கிலோ உணவை உட்கொள்ள வேண்டிய தேவை யானைகளுக்கு இருக்கிறது.

யானைப்பசிக்கு சோளப்பொறியா? என்பதற்கு அர்த்தம் இப்போது புரிகிறதா?




தண்ணீர் பருகும் யானைகள்

அதிக உணவை உண்பதனால் ஒவ்வொரு நாளும் 15-16 மணிநேரம் யானைகள் உணவு உண்பதற்கு செலவழிக்க வேண்டும். யானைகள் ஒரு நாளுக்கு 100 – 200 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். யானைகள் உட்கொள்ளும் உணவில் 50 விழுக்காடு மட்டுமே சீரணமாகும் 50 விழுக்காடு அப்படியே தரையில் விழும்.

ஒரு நாளில் ஒரு யானை வெளியேற்றும் மீத்தேனை அப்படியே பிரித்தெடுத்தால் ஒரு காரை 20 மைல் ஓட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும்.

யானைகள் பல வகைகளில் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. பிளிரும் சத்தம், உடல் மொழி, தொடுதல் மற்றும் வாசனை மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.

நில அதிர்வுகளை உருவாக்குவதன் மூலமாகவும், வைப்ரேஷன்களை ஏற்படுத்தும் சத்தத்தின் மூலமகவும் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. இந்த வைப்ரேஷன்களை எலும்புகள் வழியாக உள்வாங்குகின்றன.




யானைகள்

ஒரு குட்டியானை பிறந்த 2 நிமிடங்களில் எழுந்து நிற்கப்பழகிவிடும். ஒரு மணி நேரத்தில் நடக்கத் தொடங்கும். இரண்டு நாட்களில் தனது மந்தையுடன் இணைந்து நடந்தாகவேண்டும்.

யானைகள் கூட்டம் கூட்டமாக உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் நடந்தாக வேண்டும் என்பதனால் குட்டிகள் கொஞ்சம் பாடுபட்டாக வேண்டியது அவசியம்.

யானைக் குட்டி

டெம்போரல் லோப் என்பது மூளையில் நினைவுகளைச் சேமித்து வைக்கும் பகுதி. இந்த பகுதி யானைக்கு மனிதர்களை விடப் பெரியதாகவும் அடர்த்தியாகவும் இருப்பதனால் யானைகளுக்கு நினைவு சக்தி அதிகம்.

Elephants Never Forget என்பது ஆங்கிலப் பழமொழி.

உலகில் உள்ள அத்தனை பாலூட்டிகளிலும் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது என்கின்றனர்.

ஆப்ரிக்கா மொத்தமும் வாழ்ந்த காட்டு யானைகளில் 90 விழுக்காடு கடந்த நூற்றாண்டில் தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டன.

இப்போது 415,000 யானைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய யானைகளும் கடந்த 3 தலைமுறைகளில் பாதிக்கும் மேல் காணாமல் போய்விட்டன. இப்போது 48,000 முதல் 52000 யானைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆசிய யானைகளில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு யானைகள் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. யானைகளால் 60 கட்டளைகள் வரை நினைவில் வைத்திருக்க முடியும்.




Elephants: Interesting Facts about the Elephants

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்த யானைகள் பெருமளவில் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதை நாம் அறிவோம்.
மக்களின் விவசாய நிலங்கள் பெருக்கப்படுதல், மனித குடியேற்றங்களால் ஆசிய யானைகள் தங்கள் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் இழந்துவருகின்றன.

இதனால் யானைகள் மக்கள் வாழும் பகுதிக்கு அடிக்கடி வர நேருகிறது. சில நேரங்களில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

யானைகள் பூமியில் எஞ்சியிருக்கும் அதிசயங்கள். உண்பது போலவே உருவாக்குவதிலும் யானைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஒரு வகையில் காட்டை தந்தையைப் போல பாதுகாக்கும் உயிரினமாகவும் யானைகள் திகழ்கின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!