Entertainment lifestyles News

மோசடியால் பணத்தை இழந்த குடும்பம்.. இப்போ ரூ.250 கோடி பிஸ்னஸ்..!

நாட்டில் இன்றைக்கு பலவிதமான நிதி மோசடிகளில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து தவிக்கின்றனர். அப்படி ஒருவர் மோசடியில் சிக்கி தனது பணத்தை எல்லாம் இழந்த பின்னரும் தனது தந்தையுடன் சேர்ந்து அயராமல் உழைத்து இன்றைக்கு இந்தியாவில் உள்ள பெரிய பேக் நிறுவனங்களில் ஒன்றுக்குச் சொந்தக்காரராக உள்ளார்.




ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் துஷார் ஜெயினும் அவரது தந்தை மூல்சந்த் ஜெயினும் கடந்த 1992இல் நாட்டையே உலுக்கிய பங்குச்சந்தை புரோக்கர் ஹர்ஷத் மேத்தா மோசடியில் சிக்கி பெரும் பணத்தை இழந்தவர்களில் இவர்களும் அடங்குவர்.

இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி குடும்பத்தைக் காப்பதற்காக இருவரும் சேர்ந்து மும்பை தெருக்களில் கைப்பைகளை விற்று வந்தனர். அவர்களது அயராத உழைப்பினால் கடந்த 1999 ஆம் ஆண்டில் High Spirit Commercial Ventures என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர் இதை 300 கடைகளாக விரிவுபடுத்தி மும்பையில் குடும்பத்தோடு குடியேறினர். 2006இல் நிறைய வாடிக்கையாளர்களை அவர்கள் பெற்றனர். வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப டிசைனர் பேக்குகளை தயாரித்து தந்தனர். 2007 தங்களது வியாபாரத்தை மேலும் வளர்த்து தினமும் மூவாயிரம் முதல் நான்காயிரம் பேக்குகளை தயாரிக்கும் பேக்டரிகளை அமைத்தனர்.




இதன்மூலம் இந்தியச்சந்தையில் தங்களுக்கு என்று ஒரு இருப்பை உறுதி செய்தனர். கம்பெனியின் நிர்வாக இயக்குநராக தற்போது உள்ள துஷார் 2017இல் Traworld, Hashtag என்ற பிராண்டு பேக்குகளை அறிமுகம் செய்தார். பின்னர் நடிகை சோனம் கபூர் அஹுஜாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு அவரை தங்களது டிராவர்ல்டு பிராண்டின் அம்பாசிடராக நியமித்தனர். இன்றைக்கு துஷாரின் கம்பெனி மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து நாடு முழுவதும் 10 பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

கம்பெனியின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. பேக் பாக் மற்றும் ஹேண்ட் பேக் விற்பனையில் நாட்டில் நான்காவது பெரிய நிறுவனமாக கம்பெனி உருவெடுத்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 1000 கோடி வருவாயை எட்டுவதுதான் துஷார் நிறுவனத்தின் திட்டமாகும். இதற்காக பிகார் மாநிலம் பாட்னாவில் புதிய பேக்டரியை அமைக்கின்றனர்.

இதன் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பேக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். உண்மையான உழைப்பும் அசராத உத்வேகமும் இருந்தால் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெறலாம் என்பதற்கு துஷாரும் அவரது தந்தை முல்சந்தும் சிறந்த உதாரணமாகும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!