Beauty Tips

முகம் மற்றும் கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க இந்த 3 பொருட்கள் போதும் !

குளிர்காலம் என்றாலே சருமம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் வரும். ஏனெனில் அந்த பருவத்தில் குளிர்ச்சியான காற்று கை மற்றும் முகங்களில் படுவதால் அதிகமாக வறண்டு போகும் வாய்ப்புள்ளது. எனவே குளிர்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து சுருக்கங்கள் ஏற்படலாம்.




Types of Facial Wrinkles (and Treatments) - DermaHealth

நமக்கு வயதாக வயதாக சருமங்கள் சுருங்கி கை மற்றும் முகங்களில் சுருக்கங்கள் ஏற்படும். இது சில சமயங்களில் இளம் வயதிலேயே குளிர்ச்சி, மன அழுத்தம் மாசுபாடு போன்ற காரணங்களால் ஏற்படலாம். முகம் மற்றும் கைகளில் உள்ள சுருக்கங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. ஏனெனில் பிறர் நம்மை பார்க்கும்போது இந்த இரண்டு விஷயங்கள் நிச்சயம் வெளியே தெரியும் என்பதால், அவை ஒரு அசௌகரியத்தை நமக்கு ஏற்படுத்தலாம்.

இந்த தற்காலிக சுருக்கங்களைப் போக்க சிலர் மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காது. இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தியே அந்த சுருக்கங்களை நாம் சரி செய்ய முடியும்.




1. எலுமிச்சை: பொதுவாகவே எலுமிச்சை சாறு சருமத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அதிகப்படியாக சிட்ரிக் அமிலம் மற்றும் விட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். எலுமிச்சையை பயன்படுத்துவதன் மூலமாகவே பல சரும பாதிப்புகளை நாம் சரி செய்யலாம். அதேபோல கைகளில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதற்கு எலுமிச்சை மற்றும் சர்க்கரை பயன்படுத்தி ஸ்கிராப் செய்வது மூலமாக சுருக்கங்கள் மறையும். இதை வாரத்திற்கு இருமுறையாவது முயற்சித்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.

2. ஆலிவ் எண்ணெய்: உங்களது முகம் மட்டும் கைகளில் அதிகப்படியான சுருக்கங்கள் இருப்பின், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். இது முடி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை தரும். சருமம் சுருங்காமல் ஈரப்பதமாக இருப்பதற்கு ஆலிவ் எண்ணெய் உதவும். இரவில் தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணெயை கை மற்றும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, மறுநாள் வெந்நீரில் கைகளைக் கழுவினால் கைகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

3. தக்காளி: நமது உணவின் ருசியைக் கூட்டும் தக்காளி, சரும சுருக்க பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். எலுமிச்சம் பழம் போலவே தக்காளியிலும் அதிகப்படியான விட்டமின் சி உள்ளது. இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து சுருக்கங்களை விரைவில் நீக்க உதவும். தக்காளியை இரண்டாக வெட்டி அதை அப்படியே நேரடியாக கை மற்றும் முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து கழுவினால் கை மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!