Entertainment News

மாட்டுப் பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி நண்பர்களை கலாய்ப்பவரா நீங்கள்?

ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிகவும் உற்சாகமாக பொங்கலுக்கு தயாராகி வருகின்றது என்று சொன்னால் நீங்கள் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவீர்கள். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து தமிழர்களின் பெருவிழாவான பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பொங்கலுக்கு தயாராகி வருகின்றனர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். மேலும் இந்த பொங்கல் விழாவை உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் சாதி மதம் பாலின வேறுபாடு இல்லாமல் கொண்டுவததால்தான் இதற்கு தனிச் சிறப்பே.




பொதுவாக ஊர் திருவிழா என்றால் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தொடங்கி ஒரு வாரம் வரை கொண்டாடுவார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு விழாக்கோலத்தில் மூழ்குகின்றது என்றால் அது பொங்கலுக்குத்தான். பொங்கலுக்கு முன்தினம் போகிப்பொங்கல், மறுநாள் பொங்கல், அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என ஒட்டுமொத்த தமிழர்களுமே திருவிழாவில் திளைத்திருப்பார்கள்.




இப்படி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகைக்கு ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்து தெரிவித்து அன்பை பரிமாறிக் கொள்வது ஒரு பண்பாகவே உள்ளது. டிஜிட்டல் உலகில் வாழ்த்து கூறுவது என்பது பல வகைகளில் உள்ளது. வாட்ஸ் –  அப்பில் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குழுவில் பொதுவான வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து வருகின்றனர். அதுவே நண்பர்கள் குழு என்றால் வாழ்த்து செய்தி என்பது பெரும்பாலும் நகைச்சுவை மிகுந்ததாக, நக்கல் தன்மையுள்ளதாக இருப்பதை பார்க்க முடிகின்றது. குறிப்பாக மாட்டுப் பொங்கல் வாழ்த்தில் நண்பர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வாழ்த்தினைப் பார்த்தால் தெரியும். அப்படி நட்பு வட்டத்தினுள் பரிமாறிக்கொள்ளும் மிகவும் நகைச்சுவையான வாழ்த்துகளை இங்கு பார்க்கலாம்.

அதேநேரத்தில் இந்த வருடமும் உங்கள் நண்பர்களுக்கு இது போன்ற நகைச்சுவை நிறைந்த மாட்டுப்பொங்கல் வாழ்த்துகளை அனுப்பி பொங்கலை ஜாலியாக கொண்டாடுங்கள்.







What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!